|
இறைவி
திருப்பெயர் தோழிநாயகி. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம்
ஒன்று இருக்கின்றது. இது தருமை ஆதீன அருளாளுகைக்குட்பட்ட
ஆலயம்.
கல்வெட்டு:
இக்கோயிலில்
மூன்று கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன.
பரகேசரிவர்மன் ஐந்தாவது ஆண்டு உத்தம சோழனின் முதல் மாதேவியார்
அர்த்தயாமக் கட்டளைக்காக நிலம் வாங்கித் தந்தனள். அதில் நெறியுடைச்
சோழப்பேராறு என்று ஓராற்றின் பேர் குறிக்கப்பட்டுள்ளது. தஞ்சை
நாயக்கர் நாளில் இக் கோயிலில் அர்த்தமண்டபம், மகாமண்டபம்,
அரண்மனைப் பணத்திலும் பொதுமக்கள் பணத்திலுமாகக் கட்டப்பட்டன.
இக் கோயிலின் துறைகாட்டு மண்டபத்தைத் தீட்சித ஐயன் உபயமாகத்
தந்துள்ளான்.
88.
திருவிற்குடி வீரட்டம்
சிவபெருமான்
தன் வீரத்தைக்காட்டிய இடங்கள் எட்டு. அவற்றுள்
இது சலந்தரனைச் சங்கரித்த பதி.
மயிலாடுதுறை -
பேரளம் தொடர்வண்டிப் பாதையில், விற்குடி
தொடர் வண்டி நிலையத்திற்கு 1.5 கி. மீ. தூரத்தில் இருக்கிறது.
திருவாரூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
இறைவர் திருப்பெயர்
வீரட்டநாதர். இறைவி திருப்பெயர்
ஏலவார்குழலி. கோயில்
கட்டுமலையில் இருக்கின்றது. உற்சவ மூர்த்தியின்
கையில் சக்கரம் இருக்கின்றது. இதற்குப் பதிகம் ஒன்றுதான். அது
ஞானசம்பந்தருடையது.
89.
திருவெண்காடு
ஆக்கூரிலிருந்து
சீகாழி செல்லும் பெருவழியில் பேருந்து மூலம்
அல்லிவிளாகத்தில் இறங்கிக் கிழக்கே 4.5 கி. மீ. தூரம் சென்றால்
இத்தலத்தை அடையலாம். இது காவிரி வடகரைத் தலங்களுள்
பதினொன்றாவது ஆகும். மயிலாடுதுறை, சீகாழி, பூம்புகார் ஆகிய
ஊர்களிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.
|