1505.
|
மஞ்சு
லாவிய மாடம திற்பொலி மாளிகைச்
செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்த்
துஞ்சு வஞ்சிரு ளாட லுகக்கவல் லீர்சொலீர்
வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே. 4 |
கு-ரை: கான் - காட்டில், அயங்கியகழி - பள்ளமானகழி,
அசங்குதல் என்பதன் மரூஉவாக் கொண்டுரைத்தலுமாம். கான், கழி, கடல்
ஆம் மூன்றன் வேறுபாடும் ஈண்டு உணர்க. தேன் அயங்கிய-தேன்சொரி்ந்த.
பொழில்-சோலை, தோல் + நயங்கு + அமர் + ஆடை. நயங்கு அமர்
தோலாடையினீர், என்றலுமாம். ஆடையினீர் - உடையை அணிந்தவரே,
நயங்க-நசங்க முன்னைய நிலைமை குலைய (பதி.162. 11.; 211:.4) அடிகேள்-
அடிகளென்பதன் விளியுருவம் அங்கம் உரி என்பது அங்கவ்வுரி என்று
விகாரமாயிற்று. அங்கம் - உடம்பு. உரி - தோல், தீயாடியதை வினாவினார்.
ஆடல் என்றிருந்ததோ?
தோனயங்கம
ராடையினீர் என்பதற்குச் செம்பொருள் கொள்ளல்
எளிதன்று. தோல் ஆடை இரண்டற்கும் இடையில் உள்ளதைப் பிரித்தல்
எவ்வாறு? நயம் கமர் என்னின் கமர் என்பதன் பொருள் யாது? நயங்கு
அமர் என்னின் நயங்கு என்பது தமிழில் இல்லை. தோன் எனப் பிரித்தல்
ஒவ்வாது.
4. பொ-ரை:
மேகங்கள் உலாவும் மாடங்களையும் மதில்களையும்
அழகிய மாளிகைகளையும் உடையதால், இனிய சொற்களைப் பேசுவோர்
வாழ்வதாய் விளங்கும் திருவான்மியூரில், எல்லோரும் உறங்கும் கரிய
இருட்போதில் ஆடலை விரும்பி மேற்கொள்ளும் வன்மையை உடையவராய்
இலங்கும் இறைவரே!, கரிய விடத்தை நீர் உண்டு தேவர்களுக்கு இனிய
அருள் வழங்கியது ஏனோ? சொல்வீர். கு-ரை : திருவான்மியூரில் உள்ள
மாடமாளிகைகளின் உயர்வு மேகங்கள் தங்குமளவினதாயிருந்தது.
பொருண்மொழி வல்லார் வாழ்ந்தவூர். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும்
நாதர், நஞ்சுண்டு வானோரைக் காத்தருளிய திறத்தை வினாவினார். மஞ்சு
- மேகம். செஞ்சொல் - பொருள் பொருந்திய செவ்விய சொல். துஞ்சுதல்
- துயிலுதல். இருள் தூங்கும்பொழுது ஆடல். வஞ்சு - வஞ்சம், கறுப்பு.
வஞ்சிருள் - காரிருள். வஞ்சநஞ்சு - கருவிடம். பயிலும் - பெருகியிருக்கும்.
|