பக்கம் எண் :

314

வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி
     பாடவே
அண்ணல் கேட்டுகந் தானுமை யாறுடை
     யைய னே.                     4
1528.







வேன லானை வெருவவுரி போர்த்துமை
     யஞ்சவே
வானை யூடறுக் கும்மதி சூடிய
     மைந்தனார்
தேனெய் பாறயிர் தெங்கிள நீர்கரும்
     பின்றெளி
ஆனஞ் சாடுமுடி யானுமை யாறுடை
     யையனே.                     5


ஆகிய இளமகளிர், தம் தன்மைகளையும், வலிய வீரச் செயல்களையும் தம்
வாய் மொழியால் பாடி வணங்க அவற்றைக் கேட்டு உகந்தருளுபவர்,
ஐயாறுடைய ஐயன்.

     கு-ரை: பண்ணின்-பண்ணிசைபோல, பண்ணிசையிலும், நல்ல -
இனிய, பவளம்போன்ற துவர் வாயினார்; துவர் - செந்நிறம். எண் இல்
-கணக்கில்லாத, எண்ணில் என்பது வினையெச்சமாகக் கோடலமையாது.
கண் இரண்டாதலின், வேலிணை (இரண்டு) ஒப்பாக்கப்பட்டன. வண்ணம் -
அவனருளே கண்ணாகக் காணும் வண்ணம். தன்மை. வலி - மந்திரமும்
தந்திரமும் மருந்து மாகித் தீராநோய் தீர்த்தருளும் வன்மை. தம் வாய்
மொழி - சிவநாமமே பாடும் நல்ல வாயின் மொழியுந் தோத்திரங்களை.
மொழி - ஆகுபெயர். அண்ணல் - சிவபெருமான், அக்காலத்தில்
திருவையாற்றில் இளமகளிர் சிவபத்தியிற் சிறந்திருந்தனர் என்று கருத
இடனுண்டு, ‘காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாட .............
சேயிழையார் நடமாடுந் திருவையாறு’ என்று வருந் தேவாரமும் (தி.1 ப.130
பா.6) ஈண்டுக் கருதுக.

     5. பொ-ரை: கொடிய யானையைப் பலரும் வெருவுமாறும்
உமையம்மை அஞ்சுமாறும் கொன்று, அதன் தோலை உரித்துப்
போர்த்தவரும், வானத்தைக் கிழித்துச் செல்லும் மதியை முடியில் சூடிய
வலியரும், தேன், நெய், பால், தயிர், இளநீர், கரும்பின் சாறு, ஆனைந்து