பக்கம் எண் :

325

சீல மேவுபுக ழாற்பெரு
     குந்திரு வாஞ்சியம்
ஆல முண்டவடி கள்ளிடம்
     ஆக வமர்ந்ததே.         4
1540.







கையி லங்குமறி யேந்துவர்
     காந்தளம் மெல்விரல்
தையல் பாகமுடை யாரடை
     யார்புரஞ் செற்றவர்
செய்ய மேனிக்கரி யமிடற்
     றார்திரு வாஞ்சியத்
தையர் பாதமடை வார்க்கடை
     யாவரு நோய்களே.        5



வாஞ்சியத்தை இடமாகக் கொண்டு அமர்ந்துள்ளார்.

     கு-ரை: சுவண்டு - பொருத்தம், சால - மிக, பொடி - திருநீறு,
மறைபேசுவர் என மாற்றுக. சீலம் - பெருந்தகைகைமயுள் ஒன்று,
ஒழுக்கமுமாம். ஆலம்-நஞ்சு. ஒற்று(ள்) மிகை.

     5. பொ-ரை: கையின்கண், விளங்கும் மான் கன்றை ஏந்தியவர்;
காந்தள் இதழ் போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதி தேவியைத்
தமது பாகமாகக் கொண்டவர்; பகைவராகிய திரிபுரத்து அசுரரின்
முப்புரங்களை அழித்தவர்; சிவந்த திருமேனியையும் கரிய மிடற்றையும்
உடையவர்; இத்தகையோராய்த் திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய
தலைவராகிய சிவபிரான் திருவடிகளை அடைபவர்களைப் போக்கற்கு
அரிய நோய்கள் எவையும் அடையா.

     கு-ரை: மறி - மான்கன்று. காந்தட்பூ கைவிரல்கட்குவமை. தையல் -
கட்டழகுடைமையாற் பெண்ணைக் குறிக்கும் பெயர், இங்குப் பார்வதி
தேவியாரை உணர்த்திற்று; தையல் எல்லார்க்கும் நாயகியாதலின்,
அடையார் - பகைவர். புரம் செற்றவர் - திரிபுரதகனம் செய்தவர்.
“முப்புரமாவது மும்மலகாரியம்” என்பது திருமந்திரம். மிடறு - கழுத்து.
செய்ய, கரிய முரண். ஐயர் - முதல்வர், அருநோய் அடையா நீங்கற்கரிய
பிறவிநோய் முதலியயாவும், திருவடியடையும் அன்பர்க்கு இல்லை.