பக்கம் எண் :

483

1810.



கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில்
கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக்
கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர்
வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே.    3
1811.



நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன்
றெண்ணிலி மறைப்பொருள்விரித்தவ ரிடஞ்சீர்த்
தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி
மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே. 4


இந்திரன் உணர்ந்து வழிபடும் இடம் எங்கும் அழகு விளங்கும்
மரம் நிறைந்த பொழிலைச் சார்ந்து வரும் குளிர்ந்த காற்று தங்கிக்
கலந்துள்ளதும் வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.

     கு-ரை: கந்து-பற்றுக்கோடு. அமர-பொருந்த. உந்தல்-தூண்டல்.
செலுத்துதல். இல்-இல்லாத. விளக்கு ஏர்-விளக்கினது அழகை. பணி-
பணிகின்ற. இந்திரனுணர்ந்தது செம்பொற் சோதியைப் போலும். இதன்
முதலடியிற் குறித்த ‘விளக்கேர்’ என்பதன் உண்மை புலப்பட்டிலது.
திருவையாற்றுப்புராணம:்- பஞ்சநதிச் சருக்கம். பா. 15, ல் உணர்த்தும்
வரலாறு காண்க. சந்தம்-அழகு, சந்தனமுமாம். தரு-மரங்கள். வளி-காற்று.
நந்து-நந்தவனம். அணவு-கிட்டும், பொருந்தும். எந்தையிடம் திருவையாறு
எனக்கூட்டுக.

     3. பொ-ரை: எட்டு வடங்களால் கட்டப்பட்ட வட்டமான
முழவத்தை நந்திதேவர் தம் கரங்களால் கொட்ட, அம்முழவொலிக்கும்
தாளச்சதிக்கும் ஏற்ப அவர்க்குப் பெருவிருப்பம் உண்டாகுமாறு
நடனமாடிய சிவபிரானது இடம், அழகிய வட்டமான மதில்களுள்
விளங்குவதும், வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.

     கு-ரை: முழவம் எட்டு வடத்தைக் கொண்டு கட்டப்பட்டது.
வட்டமானது. நந்திதேவரால் கொட்டப்படுவது. கரம்-கை. இடம்-விருப்பம்.
நட்டம் அவை இட்டவர்-திருக்கூத்து வகைகளை ஆடியவர் (சிவபெருமான்)
இட்டவர் இடம் திருவையாறு என்க. சீர் வட்டம் இரண்டும்
மதிலைவிசேடித்தன, மதிலுள் திகழும் திருவையாறு. வண்மை-வளத்தைக்
குறித்தது.

     4. பொ-ரை: கல்லால மரநிழலை அடைந்து சனகாதியர் நால்வருக்கு
அக்காலத்தில் வேதப் பொருளை விரித்துரைத்த சிவபிரானது