பக்கம் எண் :

526

1880.



இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த
அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்
மருக்கு லாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
தருக்கு லாவிய தண்பொழி னீடுசாய்க் காடே.    8
1881.



மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த
வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில்
சேலி னேர்விழி யார்மயி லாலச் செருந்தி
காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே.      9


யருளிய திருநாவுடையார். பளிங்காலான குழை அணிந்த திருச்செவியார்.
ஓதம் நஞ்சு-பாற்கடலில் எழுந்தவிடம். அணி கண்டர்-அழகு செய்யும்
திருநீலகண்டர். அணிந்த எனலுமாம். உகந்து-உயர்ந்து, விரும்பி. மாதர்
அழகு, இச்சையுமாம். மாதர் வண்டு-பெண், காதல் வண்டு-ஆண்.
ஆடுதலும் ஊடுதலும் உணர்த்தப்பட்டமை அறிக.

     8. பொ-ரை: தான்வீற்றிருக்கும் நீண்ட கயிலைமலையைப் பற்றிப்
பெயர்த்து எடுத்த இராவணனின் உடலை நெரித்துப் பின் அருள்செய்த
சிவபிரானது கோயில், மணம் பொருந்திய மல்லிகை, சண்பகம் ஆகிய
வளமான பூக்களைக்கொண்ட மரங்கள் விளங்கும் தண்பொழில்களை
உடைய சாய்க்காடாகும்.

     கு-ரை: இருக்கும் நீள்வரை-வீற்றிருக்கும் உயர்ந்த கயிலை
மலையை. ஆகம்-உடம்பு. மரு-மணம். தரு-மரம். நீடுதல்-ஓங்கிப் பரந்து
அழியாமை குறித்தது. இருக்கும் வரையை எடுத்த அரக்கன், தூண்
துரும்பாகும் இழிநிலையை எய்தி, அஞ்சி இறைவனை இன்புறுத்த
இன்னிசைபாடி மகிழ்வித்து, நாளும் பெற்றான் வாளும் பெற்றான் என்பது
குறித்தே, ‘நெரித்து’ என்பதை அடுத்து‘அருள் செய்தவன்’ என்றருளினார்
ஆசிரியர்.

     9. பொ-ரை: திருமால் பிரமர்களால் காணுதற்கு அரியவனும்
பொருந்திய கடலிடை எழுந்த விடத்தை உண்டவனும், ஆகிய
சிவபெருமான் உறையும் கோயில், சேல்மீன் போன்றகண்களைக்
கொண்ட மகளிர் வாழ்வதும், தோகையை விரித்து மயில்கள் ஆடுவதும்
செருந்திமரங்கள் செம்பொன் போலக் காலையில் மலர்ந்து மணம்
பரப்புவதுமான சாய்க்காடு ஆகும்.