1899.
|
கண்ணுதலான்
வெண்ணீற்றான்
கமழ்சடையான் விடையேறி
பெண்ணிதமா முருவத்தான்
பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப்
பிரமபுரந் தொழவிரும்பி
எண்ணுதலாஞ் செல்வத்தை
யியல்பாக வறிந்தோமே. 5 |
1900.
|
எங்கேனும்
யாதாகிப்
பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும்
எம்பெருமா னெருதேறித்
கொங்கேயு மலர்ச்சோலைக்
குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச்
சங்கரன்றன் றன்மைகளே. 6 |
5.
பொ-ரை: நுதல் விழியனும், வெண்ணீறு அணிந்தவனும் மணம்
கமழும் சடையினனும், விடையேறி வருபவனும், இனிய பெண்ணொடு கூடிய
உருவத்தினனும், பிஞ்ஞகனும், பேர் பல உடையவனும் ஆகிய சிவபிரான்
எழுந்தருளிய விண்ணோரால் கருதப்படுமாறு தோன்றியபுகழ் உடைய
பிரமபுரத்தைத் தொழவிரும்பும் நாம் இயல்பாக அறிந்துள்ள புண்ணியம்
பெற்றுள்ளோம்.
கு-ரை:
கண்நுதலான் - நுதலிற் கண்ணை உடையவன்,
கண்ணையுடைய நுதலினன். நுதலும் (கருதும்) இடமாதலின், நுதல்
எனப்பட்டது; கண்ணுதல் என்றதும் அதுபற்றியே. செந்தீயான்
(கண்ணுதலான்) என்று கருதின் வெண்ணீற்றான் முரண்டொடையாம்.
ஏறி-பெயர்ச்சொல். இதம்-நன்மை. பிஞ்ஞகன்- தலைக் கோலத்தன்.
பேர்பல- பேராயிரம் (பரவிவானோர் ஏத்தும் பெம் மான்)
விண்-விண்ணோர்க்கு இடவாகுபெயர். நுதலா-கருது தலாக. எண்ணுதலாம்
செல்வத்தை - தியானிக்கும் ஐசுவரியத்தை. இயல்பாக-உள்ளவாறு.
6.
பொ-ரை: தேன் பொருந்திய மலர்ச்சோலை சூழ்ந்து தண்ணிதாக
விளங்கும் பிரமபுரத்துள் சங்குபோன்ற வெண்ணிற
|