|
1938.
|
செடியாய
வுடல்தீர்ப்பான்
தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த
புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழிற்காழிக்
கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க்
கில்லையாம் மறுபிறப்பே.
11
|
திருச்சிற்றம்பலம்
(பா.121). என்றதை
நோக்கிப், புடைத்தவன் என்று கொண்டே இராவணன்
என்று கூறுலும் நன்றாகும்.
11.
பொ-ரை: குணமில்லாத இவ்வுடலொடு பிறக்கும் பிறப்பை
நீக்கியருளுவானும், தீவினை காரணமாகவரும் நோய்களுக்கு மருந்தாக
இருந்து அருள்பவனும், மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியனும்
ஆகிய சிவபெருமானுக்கு அடித்தொண்டு பூண்ட மணம் கமழும் பொழில்
சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய கவுணியர்கோன் ஆகிய ஞானசம்பந்தன்
பாடிய இப்பதிகச் சொல்மாலையைச் சோம்பியிராமல் சொல்லி
வழிபடவல்லவர் கட்கு மறு பிறப்பு இல்லை.
கு-ரை: செடி-குணமில்லாமை.
ஆய-ஆகிய. உடல் தீர்ப்பான்-
பிறப்பில்லாமலருள்பவன். தீவினைக்கு ஓர் மருந்து ஆவான் வரும் பிறவி
நோய் தீர்ப்பான்காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்
(தி.6ப.64 பா.4) உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று மெள்ள உள்க
வினை கெடும் மெய்ம்மையே (தி.5ப.79பா.8-9) மந்திரமும் தந்திரமும்
மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் (தி.6ப.54பா.8). இத்
தலத்தில் நோய் நீங்கும் பொருட்டு மக்கள் திரள் திரளாக வந்து
வழிபடுதலை இன்றும் காணலாம். பொடியாடிக்கு-திருநீற்றில் மூழ்கிய
சிவ பிரானுக்கு. அடிமை-அடித்தொண்டு, கடி-மணம், காவல். மடியாது-
சோம்பியிராமல், வாளாபிறந்திறவாது எனலுமாம். இத் தலத்தை
வழிபட்டவர்க்கு மேற்கூறியவாறு, தீராத பிறவி நோயையும் தீர்த்தருள் வான்
சர்வலோகங்கட்கும் ஏகவைத்தியனான நாதன் என்னும் உண்மையை விளக்க
இல்லையாம் மறு பிறப்பே என்றருளினார். இத்திருப்பதிகத்தை மட்டும்
நாடோறும் பாராயணஞ் செய்வோர்க்குப் பிறவி ஒழியும் என்பது உறுதி.
|