பக்கம் எண் :

701

2128.







பிள்ளைப் பிறையும் புனலுஞ் சூடும்
     பெம்மானென்
றுள்ளத் துள்ளித் தொழுவார் தங்க
     ளுறுநோய்கள்
தள்ளிப்போக வருளுந் தலைவ
     னூர்போலும்
வெள்ளைச் சுரிசங் குலவித் திரியும்
     வெண்காடே.                     5
2129.



ஒளிகொண் மேனி யுடையா யும்ப
     ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு
     மடியார்கட்


இனி வாழ் நாளும் சுருங்கி எனலுமாம். நணுகுதல்-நாளின் வினை. உரையால்
வேறா-வாயுரையால் வேறுபடாத படி. உள்குவார்கள்- தியானிப்பவர்களது.
கரையாவண்ணம்-கரைந்து ஒழியாதவாறு நிலைத்து நிற்கும் வகை. இறக்கும்
முன் இறைவனை அகத்தில் நினைந்தும், வாயால் வழுத்தியும் வழிபடுவார்
உள்ளத்தில் அவனது திருவருளுருவம் கரையாது நிற்கும் என்றவாறு.
விரை-மணம். கமலத்து-தாமரை மலரில். அன்னம்-அன்னப்பறவை மருவும் -
பொருந்திவாழும்.

     5. பொ-ரை: இளம்பிறையையும் கங்கையையும் முடியிற் சூடிய
பெருமான் என்று மனத்தில் நினைந்து தொழுபவர்களின் பெருகிய
நோய்களைத் தள்ளிப் போகுமாறு செய்தருளும் தலைவனது ஊர்,
வெண்ணிறமான உள்கோடுகளை உடைய சங்குகள் உலவித்திரியும்
திருவெண்காடாகும்.

     கு-ரை: பிள்ளைப்பிறை-இளம்பிறை. புனல்-கங்கை நீர். பெம்மான்-
பெருமகனென்பதன் மரூஉ. உள்ளத்து உள்ளி தொழுவார் தங்கள்-மனத்தில்
நினைந்து வழிபடும் அடியார்களுடைய. உறுநோய்கள்-மிக்க நோய்களை.
தள்ளி-உந்தி. போக-போயொழிய. போகத்தள்ளியருளும் எனலுமாம்.
வெள்ளைச்சுரி சங்கு உலவித் திரியும்-வெண்ணிறமுடைய சுரிந்த சங்குகள்
உலாவித் திரியும்.

     6. பொ-ரை: ஒளி கொண்ட திருமேனியை உடையவனே!
உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது