2190.
|
துன்னு
கடற்பவ ளஞ்சேர்
தூயன நீண்டதிண் டோள்கள்
மின்னு சுடர்க்கொடி போலும்
மேனியி னாளொரு கங்கைக்
கன்னி களின்புனை யோடு
கலைமதி மாலை கலந்த
பின்னு சடைப்பெரு மானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.
2 |
2191.
|
கள்ள
மதித்த கபாலங்
கைதனி
லேமிக வேந்தித்
துள்ள மிதித்துநின் றாடுந்
தொழில
ரெழின்மிகு செல்வர் |
2.
பொ-ரை: கடலில் பொருந்திய பவளம் போன்ற தூயனவாகிய
நீண்ட தோள்களையும், மின்னுகின்ற ஒளி பொருந்திய கொடிபோன்ற
மேனியையும் உடைய கங்கையைப், பிற நதிக்கன்னியரின் நீரோடு, கலை
வளரும் மாலைபோன்ற பிறைமதியைப் புனைந்த பின்னிய சடையை
உடைய பெருமான் பெரும்புலியூரில் பிரியாது உறைகின்றார்.
கு-ரை: துன்னு - நெருங்கிய. பவளம் சேர்
தோள்கள் - கடலிலுள்ள
பவளத்தை ஒத்த தோள்கள். தூயன தோள்கள். நீண்ட தோள்கள்.
திண்மை - உறுதி. சுடர்க்கொடி போலும் மேனியினாள் - சோதிக்கொடி
போன்ற திருமேனியுடையவள். கங்கைக் கன்னிகள் புனையோடு - கங்கை
நதியின் கிளைகளின் நீரொடு. நதிகளைப் பெண்பாலாக் கொள்ளுதல் மரபு.
நதிபதி எனக் கடலைக் கொள்ளுதலால் கன்னி என்பது பெண்ணென்னும்
பொருட்டு. புனை - நீர். அனைவருகானகத்து அமுதளாவிய புனை வர
உயிர் வரும் உலவை (கம்பர். அகத்தியப்-4) கலைமதிமாலை - பதினாறு
கலைகளுடைய திங்கட்கண்ணி, சிவபெருமான் சடைமேலுள்ளது
பிறையேயாயினும் மதிக்குரிய அடை கொடுத்துக் கூறுதல் உண்டு. சாதியடை.
திருமுறையுள் ஆண்டாண்டுக் காண்க. புனையோடுமாலை கலந்த சடை.
பின்னு சடை. சடையையுடைய பெருமானார்.
3. பொ-ரை:
கள்ளங்கருதிய பிரமனது கபாலத்தைக் கையில் ஏந்தித்
துள்ளி மிதித்து நின்றாடும் தொழிலராகிய அழகிய செல்வரும்,
|