| |
நடைநவின்
ஞானசம் பந்தன்
நன்மையா லேத்திய பத்தும்
படைநவில் பாடல் பயில்வார்
பழியொடு பாவ மிலாரே. 11
|
திருச்சிற்றம்பலம்
ஞானசம்பந்தன் நன்மை
அருளுமாறு வேண்டிப்பாடிய சாதனமாகிய பாடல்களை ஓதுவார் பழிபாவம் இலாராவர்.
கு-ரை:
விடை நவிலும் கொடியானை - எருது பயின்ற கொடியை
உடையவனை. வெண்கொடி - வெள்ளைத் துணிக்கொடி. கடை - வாயில்,
இடமும், அங்காடியுமாம். காதலன் - உயிர்கட்கு அருட்காதல் விளைப்பவன்,
அன்புருவானவன் எனலுமாம். அன்பே சிவம். நடை -ஞானாசாரம்.
நன்மை - மங்களம். படைநவில் பாடல் -திருவருட்சாதனமாக நவின்ற
பாடல்கள். படை - சாதனம். அல்லற்பட்டு. . .செல்வத்தைத் தேய்க்கும்
படை (குறள்.555). படை -நிவேதனமுமாம். இறைவன் புகழொடு படுக்கும்
பாடல் என்றார் கோவை சிவக்கவிமணி முதலியாரவர்கள். பழியொடுபாவம்
இலர் (பா.5இல்) உரைத்தாங்கு உரைத்துக்கொள்க.
|
திருஞானசம்பந்தர்
புராணம்
சீர்வளர்
கோயிலை அணைந்து தேமலர்க்
கார்வளர் கண்டர்தாள் பணிந்து காண்பவர்
பார்புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார்பொழிற் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.
-சேக்கிழார்.
|
|