| |
கோணிய
கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை
கூருஞ் செல்வங்
காணிய வையகத்தா ரேத்துங் கழுமலநாங்
கருது மூரே. 2 |
2224.
|
புகலி
சிரபுரம் வேணுபுரஞ் சண்பை
புறவங்
காழி
நிகரில் பிரமபுரங் கொச்சைவய நீர்மேல்
நின்ற
மூதூர்
அகலிய வெங்குருவோ டந்தண் டராயமரர்
பெருமாற்
கின்பம்
பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது
பாடு
மூரே. 3 |
கு-ரை: வெள்ளத்து ஓங்கும் தோணிபுரம்
- பிரளய வெள்ளத்துள்
மேல் ஓங்கி மிதந்து விளங்கிய தோணிபுரம். தூநீர் - பரிசுத்த
ஜலத்தையுடைய. கோணிய - வளைந்த. கோட்டாறு - இன்றும் உளது.
கோட்டாறு சூழ் கொச்சை (தி.3 ப.89 பா.1) கூரும் - மிகும். காணிய -
காண.
வையகத்தார்
- (வையாலாகிய வீடு என்னும் பொருள்படும் வையகம்
பெருகிய உலகிற்கு ஆகுபெயர்) உலகர். (தி.2 பதி.102- பா.5. கோட்டாறு).
3. பொ-ரை: நாம்
கைதொழுது பாடும் ஊர் புகலி முதலாக
பூந்தராய் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக்கொண்ட,
சிவபெருமானுக்கு இன்பம் தரும் நல்ல கழுமலமாகும்.
கு-ரை:
நிகர் - ஒப்பு. இல் - இல்லாத நீர் மேல் நின்ற மூதூர் -
தோணிபுரம். அகலிய - அகன்ற இடத்தையுடைய. அம் தண்தராய் -
பூந்தருவராய். அமரர் பெருமாற்கு - தேவர் பிரானுக்கு. பகரும் - கூறும்.
நாம் கைதொழுது பாடும் ஊர் என்றதால், நாம் பாடும்போதும்
கைதொழுதல் இன்றியமையாதது என்பது விளங்கும்.
இத்தமிழ் மறையைப்
போற்றும் அருளொழுக்கம் புலப்படும். பா.6
குறிப்புரை பார்க்க.
|