|
பரவுமுறையே
பயிலும்
பந்தன்செஞ்சொன்
மாலை
இரவும்பகலும் பரவி
நினைவார்வினைக
ளிலரே. 11
|
திருச்சிற்றம்பலம்
பெருமைகள் முழுவதையும்
அறியலாகாதெனினும் இயன்றவரை கூறிப்
பரவுமாறு ஞானசம்பந்தன் சொல்லும் இப்பதிகச் செஞ்சொல் மாலையை
இரவும் பகலும் ஓதிப்பரவி நினைபவர் வினைகள் இலராவர்.
கு-ரை:
மரவம்-குங்குமமரம். அசைத்த-கட்டிய. அகலம்-வியாபகம்.
அறியல் ஆக-அறிவது இசையும்படி. பரவுமுறையே பயிலுதல் ஆசிரியர்க்கே
இருந்ததெனின், நம்மனோர்க்கு அதன் இன்றியமையாமை கூறல்
வேண்டுமோ?
|
திருஞானசம்பந்தர்
புராணம்
பரவி ஏத்திஅங்
கரிதினிற் போந்துபார்
பரவுசீர்
அரசோடு
விரவு நண்புடைக் குங்குலி யப்பெருங்
கலயர்தம்
மனைமேவிக்
கரையில் காதல்மற் றவர்அமைத் தருளிய
விருந்தினி
தமர்ந்தங்குச்
சிரபு ரத்தவர் திருமயா னமும்பணிந்
திருந்தனர்
சிறப்பெய்தி.
-சேக்கிழார்.
|
|