2451.
|
சாக்கி
யப்படு வாருஞ்
சமண்படு வார்களும் மற்றும்
பாக்கி யப்பட கில்லாப்
பாவிகள் தொழச்செல்வ
தன்றால்
பூக்க மழ்ந்துபொன் னுந்திப்
பொருபுன னிவாமல்கு
கரைமேல்
ஆர்க்குஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம்
அருளே. 10 |
2452.
|
கறையி
னார்பொழில் சூழ்ந்த
காழியுண் ஞானசம்
பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த
அரத்துறை அடிகள்தம்
அருளை |
றொகையாக்கலும் ஆம்.
கமழ்ந்து-தோற்றி. கமழ்ந்து உந்தி வருபுனல்
என்றியைத்துக்கொள்க. அணங்கும்-அழகு செய்யும்.
10. பொ-ரை: மலர்களின் மணம் கமழ்ந்து
பொன்னுந்திக்
கரையை பொருது வரும் நீரை உடைய நிவா நதிக் கரைமேல் ஒலிக்கின்ற
சோலைகளால் சூழப்பெற்று விளங்கும் நெல் வாயில் அரத்துறை அடிகள்தம்,
திருவருள் சாக்கிய மதத்தில் விழுபவர்களும் சமண சமயத்தைச் சார்பவரும்
மற்றும் புறப்புறச் சமயங்களைத் தழுவுவார்களும் ஆகிய, சைவ நெறி சாரும்
பாக்கியம் இல்லாத பாவிகளால், தொழுது பெறுவதற்கு இயலாதது.
கு-ரை: சாக்கியப்படுவார்-சாக்கியமதத்தில்
விழுபவர். சமண்
படுவார்-சமண மதத்தில் விழுபவர். மற்றும் பாக்கியப் படகில்லாப்
பாவிகள்-சாக்கியரும் சமணரும் அல்லாத வேறு மதங்களில் விழுந்து,
சைவசமயம் புகும் பாக்கியத்தை அடையமாட்டாத தீயவினையின் பயனை
நுகர்பவர்கள் ஆர்க்கும்-ஒலிக்கும்.
11. பொ-ரை: கருமை நிறம் அமைந்த
பொழில்கள் சூழ்ந்துள்ள
சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன், ஒலிக்கின்ற அழகிய புனல்
பரவிய நெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருளைப் பெறுதற்குரிய
நெறிகளை முறையோடு தெரிவித்துள்ள இப்பதிகப் பாடல்கள் பத்தையும்
ஓதவல்லவர்கட்கு ஐயுறவின்றி வினைகள் நீங்கும். இஃது உறுதி.
|