2506.
|
அல்லி நீள்வயல்
சூழ்ந்த
அரசிலி அடிகளைக் காழி
நல்ல ஞானசம் பந்தன்
நற்றமிழ் பத்திவை நாளும்
சொல்ல வல்லவர் தம்மைச்
சூழ்ந்தம ரர்தொழு தேத்த
வல்ல வானுல கெய்தி
வைகலு மகிழ்ந்திருப் பாரே. 11
திருச்சிற்றம்பலம்
|
11.
பொ-ரை: நீர்ப் பூக்களை உடைய நீண்ட வயல்கள் சூழ்ந்த
திரு அரசிலி இறைவனைப் போற்றிச் சீகாழிப் பதியில் தோன்றிய நல்ல
ஞானசம்பந்தர் பாடியருளிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும்
நாள்தோறும் சொல்லி வழிபடவல்லவர். வானுலகெய்தி அமரர்கள்
தொழுது ஏத்த வைகலும் மகிழ்ந்து வாழ்வர்.
கு-ரை:
அல்லி-அகவிதழ். (இரவில் பூக்கும் பூக்கள்) நற்றமிழ்-
பிறவிப்பிணிக்கு மருந்தாகிய தமிழாகிய இத்திருப்பதிகம். நாளும் சொல்ல
வல்லவர் வைகலும் மகிழ்ந்திருப்பார் ஒருநாள் தவறின் அன்று மகிழ்ந்திரார்
என்பது அவரவர் அநுபவத்தால் உணரப்படும்.
|
திருஞானசம்பந்தர்
புராணம்
ஏறணிந்த
வெல்கொடியார் இனிதமர்ந்த பதிபிறவும்
நீறணிந்த திருத்தொண்டர் எதிர்கொள்ள நேர்ந்திறைஞ்சி
வேறுபல நதிகானங் கடந்தருளி விரிசடையில்
ஆறணிந்தார் மகிழ்ந்ததிரு அரசிலியை வந்தடைந்தார்.
-சேக்கிழார்.
|
|