பக்கம் எண் :

ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருள் வரலாறு1

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரம்
மூன்றாம் திருமுறை

அறக்கொடை

சைவசிகாமணி, சமாதான நீதவான்,
திரு. முருகேசு கணபதிப்பிள்ளை
மறவன்புலவு, சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.

     இவர் ஈழநாடு, யாழ்ப்பாண மாவட்டம், சாவகச்சேரி - மறவன்புலவில்
சைவத்தமிழ்க்குடியில் தோன்றியவர். (காலம் 15.12.1910 - 19.11.1993)
மறவன்புலவு, வள்ளக்குளப் பிள்ளையார் கோவில் அறங்காவலர். யாழ்ப்ாணம்
இந்துக்கல்லூரித் தமிழ்ப் பாடசாலையில் தமிழாசிரியராகவும், துணைத்தலைமை
ஆசிரியராகவும் பணியாற்றியவர். யாழ்ப்பாணம், ஸ்ரீ காந்தா அச்சகம்,
யாழ்ப்பாணம்-சென்னை, காந்தளகம் உரிமையாளர்.

     சிவதலங்கள் பலவற்றையும் யாத்திரையாகச் சென்று தரிசித்த
சிவபுண்ணிய முடையவர். யாழ்ப்பாணம், தவத்திரு சிவயோக சுவாமிகளின்
அருளாசி பெற்றவர். கைதடி கிராமசபை, யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை,
திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை முதலியவற்றில் உறுப்புரிமை
பெற்றிருந்தவர். கல்வி நிறுவனங்கள், கோயில்கள் முதலியவற்றுக்குப்
பெருநிதி உதவியவர். கந்தபுராணம், சிவராத்திரி புராணம் முதலிய நூற்றுக்கும்
மேற்பட்ட சைவத் தமிழ் நூல்களைப் பதிப்பித்தவர். இவர்தம் இல்வாழ்க்கைத்
துணைவியார் திருமதி. தங்கம்மா.

     ஈழத்தலமாகிய திருக்கோணமலைத் திருப்பதிகம் அமைந்த மூன்றாம்
திருமுறை இவரின் அறக்கொடையால் வெளிவருகிறது
.

     குறிப்பு:- இத்திருமுறைப் பதிப்பின் விற்பனைத் தொகை மீண்டும்
இத்திருமுறையைத் தொடர்ந்து வெளியிடப் பயன்படுத்தப் பெறும்.