பக்கம் எண் :

1002திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

பண்டையய னன்னவர்கள் பாவனை
     விரும்புபரன் மேவுபதிசீர்
வெண்டரள வாணகைநன் மாதர்கள்
     விளங்குமெழில் வீழிநகரே.            10

3667. மத்தமலி கொன்றைவளர் வார்சடையில்
       வைத்தபரன் வீழிநகர்சேர்
வித்தகனை வெங்குருவில் வேதியன்
     விரும்புதமிழ் மாலைகள்வலார்
சித்திர விமானமமர் செல்வமலி
     கின்றசிவ லோகமருவி
அத்தகு குணத்தவர்க ளாகியனு
     போகமொடி யோகமவரதே.            11

 திருச்சிற்றம்பலம்


ஆற்றலுடைய தெய்வம் ஒன்று உள்ளது என்பதால் என்ன பயன் உள்ளது?
வேதத்தை ஓதும் பிரமனைப் போன்ற அறிஞர்கள் விரும்பிப் போற்றும்
சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர், வெண்ணிற முத்துப்போன்ற
ஒளிபொருந்திய பற்களையுடைய கற்புடைப் பெண்கள் விளங்கும் அழகிய
திருவீழிமிழலையாகும்.

     கு-ரை: குண்டு-முருட்டுத்தன்மையையுடைய. அமணர் ஆகி - கோலம்
மிகு - அழகு மிக்க. பீலியொடு - மயிற்பீலியொடு. குண்டிகை பிடித்து,
எண்டிசையும் - எட்டுத்திக்கிலும், இல்லை ஒரு தெய்வம் உளது என்பர், அது
என்ன பொருள் ஆம் - அவ்வாறு அவர்கள் கூறுவது என்ன பயன்
தருவதாகும், பண்டை - வேதத்தைக் கேட்ட அக்காலத்து. அயன் -
பிரமனை. அன்னவர்கள் - ஒத்த அந்தணர்களின். பாவனை - பாவிக்கும்
திறனை. விரும்பு - விரும்புகின்ற. பரமன் - சிவபெருமான். மேவுபதி -
தங்கும் தலம். சீர் - சிறப்புற்ற. வெண்தரளவாள்நகை - வெள்ளிய முத்து
போன்ற. ஒளிபொருந்திய பற்களையுடைய. நல்மாதர்கள் - கற்புடைய
பெண்கள். எழில் விளங்கும் - அழகால் விளங்கும் வீழிநகர்.

     11. பொ-ரை: பொன்னூமத்தை மலரும், கொன்றைமலரும், நீண்ட
சடையிலே அணிந்த பெருமானும், திருவீழிமிழலைநகரில் வீற்றிருந்தருளும்
சதுரனுமாகிய சிவபெருமானைப் போற்றி.