பாடலில்) வரைமேலருவி.....
கமழும் என்றதனாற் குறிஞ்சி நிலமாகக்
கருதற்க, மருத நிலமே என்பதற்கு. பரசுதருபாணியை - மழுவேந்திய
கரதலம் உடைய சிவபெருமானை, நலம் நிகழ் - வளத்தால் விளங்குகின்ற. செய் - வயலை
உடைய, தோணிபுரம், நாதன் - தலைவராகிய, மொழிவார்
- பாடுவோர், விதி - பிரமனும், விரை - வாசனை.
திருஞானசம்பந்தர்
புராணம்
காவின்மேல்
முகிலெழுங் கமழ்நறும் புறவுபோய்
வாவிநீ டலவன்வாழ் பெடையுடன் மலர்நறும்
பூவின்மேல் விழைவுறும் புகலியர் தலைவனார்
சேவின்மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார்.
வெள்ளிமால்
வரையைநேர் விரிசுடர்க் கோயிலைப்
பிள்ளையார் வலம்வரும் பொழுதினிற் பெருகுநீர்
வெள்ளஆ னந்தமெய் பொழியமேல் ஏறிநீர்
துள்ளுவார் சடையரைத் தொழுதுமுன் பரவுவார்.
பரவுசொற்
பதிகம்முன் பாடினார் பரிவுதான்
வரவயர்த் துருகுநேர் மனனுடன் புறம்அணைந்(து)
அரவுடைச் சடையர்பேர் அருள்பெறும் பெருமையால்
விரவும்அப் பதிஅமர்ந் தருளியே மேவினார்.
அன்ன தன்மையில்
அப்பதி யினில்அமர்ந் தருளி
மின்னெ டுஞ்சடை விமலர்தாள் விருப்பொடு வணங்கிப்
பன்னும் இன்னிசைப் பதிகமும் பலமுறை பாடி
நன்னெ டுங்குல நான்மறை யவர்தொழ நயந்தார்.
-சேக்கிழார்.
|
|