| 
        பதிக வரலாறு:       தமிழ் 
        விரகர், திருவிரும்பூளை, 
        திருவரதைப் பெரும்பாழி முதலிய சிவதலங்களை வழிபட்டு வந்து, திருச்சேறை அடைந்து, புனைந்த நீடு
 தமிழ்த்தொடை இத்திருப்பதிகம்.
 திருவிராகம்பண்: 
        சாதாரி
 
         
          | ப.தொ.எண்:344 |  | பதிக 
            எண்: 86 |   திருச்சிற்றம்பலம் 
         
         
          | 3723. | முறியுறு 
            நிறமல்கு முகிழ்முலை மலைமகள் |   
          |  | வெருவமுன் வெறியுறு மதகரி யதள்பட வுரிசெய்த
 விறலினர்
 நறியுறு மிதழியின் மலரொடு நதிமதி
 நகுதலை
 செறியுறு சடைமுடி யடிகடம் வளநகர்
 சேறையே.                          1
 |  
       1. 
        பொ-ரை: சிவபெருமான், தளிர் போன்ற நிறமும், அரும்பு போன்ற முலையுமுடைய உமாதேவி அஞ்சுமாறு, மதம் பிடித்த யானையின் தோலை
 உரித்த வலிமையுடையவர். நறுமணம் கமழும் இதழ்களை உடைய
 கொன்றைப் பூவோடு, கங்கை நதியையும், பிறைச்சந்திரனையும்,
 மண்டையோட்டையும் நெருங்கிய சடை முடியில் அணிந்துள்ள அவ்வடிகள்
 வீற்றிருந் தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
       கு-ரை: 
        முறியுறு - தளிர்போன்ற (உறு உவமவாசகம்) நிறம் மல்கு - நிறம் பொருந்திய. முகிழ் - அரும்புபோன்ற, (கோங்கு, தாமரை இவற்றின்
 அரும்புகள்) முலை, மலைமகள், வெருவ - அஞ்ச. மதவெறி உறுகரி -
 எனக்கூட்டுக. அதள் - தோல். பட - உடையாகும்படி. விறல் - வலிமை. நறி
 - நறுமணமுடையது (ஆகி). உறும் - பொருந்திய. இதழியின் மலரொடு -
 கொன்றைப்பூவோடு. (நறு+இ=நறி என்றாயது). வெண்மையுடையது வெள்ளி
 யென்றாயவாறு
 |