|
தன்னியல்
தசமுக னெரியநள்
ளாறர்தந் நாமமே
மின்னிய லெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 8 |
| 3742. |
கான்முக
மயிலியன் மலைமகள் |
| |
கதிர்விடு
கனமிகு
பான்முக மியல்பணை யிணைமுலை
துணையொடு பயிறலின்
நான்முக னரியறி வரியநள்
ளாறர்தந் நாமமே
மேன்முக வெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 9 |
ஒத்தனவாய் விளங்கும்
இருமுலைகளைப் புணர்கின்றவரும், ஆணவமே
இயல்பாக உடைய இராவணனைக் கயிலையின் கீழ் நெரியும்படி
செய்தவருமான திருநள்ளாற்று இறைவரின் திரு நாமத்தைப் போற்றும்
திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை, மின்னலைப் போன்ற எரியும்
இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.
கு-ரை:
மதம் மிகு - மான்மதமாகிய கத்தூரியை மிக அணியப்பெற்ற.
மதமென நின்றது முதற்குறை. பொன்னியல் - பொன்னாலியன்ற. புணர்தலின்
- தழுவுதலால். தன் இயல் - தீமை செய்வதில் தன்னைத்தானே யொத்த.
தசமுகன் - இராவணன் நெரிய அடர்த்த நள்ளாறர். அடர்த்த என்ற சொல்,
வருவித்துரைக்கப்பட்டது. மின் இயல் - ஒளியையுடைய.
9.
பொ-ரை: காட்டில் விளங்கும் மயில் போன்ற சாயலையுடைய
உமாதேவியின், ஒளிவிடுகின்ற கனத்த பால்சுரக்கும் பருத்த இருமுலைகளைக்
கூடுகின்றவரும், பிரமனும், திருமாலும் அறிவதற்கு அரியவராக
விளங்குகின்றவருமான திருநள்ளாற்று இறைவரின் திருநாமத்தைப் போற்றும்
திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேல்நோக்கி எரியும் இந்நெருப்பிலிட்டாலும் அவை
பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.
|