3757. |
ஏலமா
ரிலவமோ டினமலர்த் |
|
தொகுதியா
யெங்குநுந்திக்
கோலமா மிளகொடு கொழுங்கனி
கொன்றையுங் கொண்டுகோட்டா
றாலியா வயல்புகு மணிதரு
கொச்சையே நச்சிமேவும்
நீலமார் கண்டனை நினைமட
நெஞ்சமே யஞ்சனீயே. 2 |
3758. |
பொன்னுமா
மணிகொழித்தெறிபுனற் |
|
கரைகள்வாய் நுரைகளுந்திக
கன்னிமார் முலைநலங் கவரவந்
தேறுகோட் டாறுசூழ |
(திருந்து அடிகளை நெஞ்சமே
போற்றி வாழ்வாயாக). அது புகல் ஆம் -
அத்திருவடி நமக்குச் சரண்புகும் இடமாம். கோட்டாறு.
2.
பொ-ரை: மடநெஞ்சமே! மணம் கமழும் ஏலம், இலவங்கம்
இவைகளோடு நறுமணம் கமழும் மலர்களையும் தள்ளிக் கொண்டு, அழகிய
மிளகுக் கொடிகளோடு, நன்கு பழுத்த கனிகள், கொன்றை மலர்கள்
ஆகியவற்றை அலைகள் வாயிலாக அடித்துக் கொண்டு ஆரவாரத்துடன்
பாயும் காவிரி நதியின் நீர் வயல்களில் புகுகின்ற அழகிய திருக்கொச்சைவயம் என்னும்
இத்திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் நீலகண்டரான
சிவபெருமானை நினைப்பாயாக! நீ அஞ்சாதே.
கு-ரை:
நுந்தி - தள்ளிக்கொண்டு. கோலம் ஆம் - அழகாகிய.
ஆலியா - ஆலித்து, ஆரவாரித்து. (கோட்டாறு வயல்புகும் கொச்சையே)
நச்சி - விரும்பி. நீலம் ஆர் கண்டனை நினை, அஞ்சிய தேவர்களைக்
காத்தமை காட்டும் கண்டம் அது. ஆகையால் நெஞ்சமே நீ அஞ்சுதல்
ஒழிவாயாக.
3.
பொ-ரை: நெஞ்சமே! பொன்னையும், பெரிய மணிகளையும்
ஒதுக்கிக் கரையில் எறிகின்ற ஆற்றுநீர் நுரைகளைத் தள்ளிக்கொண்டு,
கன்னிப்பெண்களின் மார்பில் பூசியிருந்த சந்தனம் முதலிய வாசனைத்
திரவியங்கள் அகற்றிக் கரைசேர்க்கின்ற காவிரி சூழ்ந்திருக்க,
உமாதேவியாரோடு நிலைபெற்று இருப்பவராகிய சிவபெருமான்
|