| 
         
          |  | ஏய்ந்ததொல் 
            புகழ்மிகு மெழின்மறை ஞானசம் பந்தன்சொன்ன
 வாய்ந்தவிம் மாலைகள் வல்லவர்
 நல்லர்வா னுலகின்மேலே.             11
 |   திருச்சிற்றம்பலம் 
       
  பொருந்திய தொன்மையான 
        புகழ்மிகுந்த, அழகிய, மறைவல்ல ஞானசம்பந்தன் போற்றி அருளிய சிறப்புடைய இத்தமிழ் மாலைகளை ஓதவல்லவர்கள்
 நன்மைதரும் வானுலகில் மேன்மையுடன் வீற்றிருப்பர்.
      கு-ரை: 
        காலனைக் காய்ந்து காலினால் செற்றவர். ஆய்ந்து - இதுவே எவற்றினும் சிறந்ததென ஆராய்ந்து. கொண்டு - தேர்ந்து. கடிகொள் -
 காவலையுடைய. கொச்சை இடம் என இருந்த அடிகளை ஞானசம்பந்தன்
 சொன்ன (மாலை). ஆய்ந்த - ஆராயந்துணர்த்திய (இம்மாலைகள் வல்லவர்.
 வான் உலகில் மேன்மையுடையவராவர்) மேல் - மேன்மையுடையவர்;
 ஆகுபெயர்.
 
        
          | திருஞானசம்பந்தர் 
              புராணம் நீடுதிரு 
              வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண்நீலமிடற் றரு மணியை வணங்கிப் போற்றிப்
 பாடொலி நீர்த் தலையாலங் காடு மாடு
 பரமர் பெரு வேளூரும் பணிந்து பாடி
 நாடுபுகழ்த் தனிச்சாத்தங் குடியில் நண்ணி
 நம்பர்திருக் கரவீரம் நயந்து பாடித்
 தேடுமறைக் கரியார்தம் விளமர் போற்றத்
 திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார்.
 -சேக்கிழார்.
 
 |  |