பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)90. திருத் துருத்தியும் திருவேள்விக்குடியும்1095

3768. தூறுசேர் சுடலையிற் சுடரெரி
       யாடுவர் துளங்கொளிசேர்
நீறுசாந் தெனவுகந் தணிவர்வெண்
     பிறைபுல்கு சடைமுடியார்
நாறுசாந் திளமுலை யரிவையோ
     டொருபக லமர்ந்தபிரான்
வீறுசேர் துருத்தியா ரிரவிடத்
     துறைவர்வேள் விக்குடியே.              2


தம்பிரான், தம்மடிகள் - என்பன ஒரு பொருளன; தாமே தமக்குத் தலைவர்
என்பது. பாங்கினால் - முறைப்படி, பகற் காலத்துத் தங்கும் இடம் நீர்வளம்
மிக்க துருத்தியாக உடையவர், இரவுக் காலத்துத் தங்குவது திருவேள்விக்
குடியாம். பாங்கினால் - என்றது, பகற் காலத்துத் திருத்துருத்தியிலும்,
இரவுக்காலத்துத் திருவேள்விக்குடியிலும், தங்கும் முறை பகல் இடம் இரவு
இடம் - இடம் என்ற சொற்கள் காலத்தைக் குறித்தன. நீர் - நீரினாலாகும்
வளத்துக்கானது காரண ஆகுபெயர்.

     2. பொ-ரை: சிவபெருமான், புதர்ச்செடிகள் நிறைந்த சுடுகாட்டில்
ஒளிவிடும் நெருப்பேந்தி ஆடுபவர். விளங்கும் ஒளியுடைய திருநீற்றினைக்
கலவைச் சந்தனம் போல மகிழ்ச்சியுடன் அணிந்து கொள்பவர்.
வெண்மையான பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடையவர். மணம்
கமழும் சந்தனக்குழம்பை அணிந்த இளமையான கொங்கைகளையுடைய
உமாதேவியோடு பொருள்வளமிக்க திருத்துருத்தியில் பகற்காலத்தில்
தங்கியிருப்பவர். இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருள்பவர்.

     கு-ரை: தூறு - புதர்ச்செடிகள், துளங்கு ஒளிசேர் - விளங்கும்
ஒளியையுடைய திருநீற்றைச் சந்தனமாகக் கொண்டு பூசுவர், நாறு - கமழும்.
சாந்து - சந்தனக் குழம்பையணிந்த, அரிவையோடு - அம்பிகையுடனே. வீறு
- செல்வ மிகுதி, துருத்தியாராய் அரிவையொடு ஒருபகல் அமர்ந்த பிரான்
இரவிடத்து வேள்விக்குடியில் உறைவர் என வினை முடிவு செய்க.