பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)93. திருஅம்பர்மாகாளம்1121

3800. கையின்மா மழுவினர் கடுவிட
       முண்டவெங் காளகண்டர்
செய்யமா மேனிய ரூனம
     ருடைதலைப் பலிதிரிவார்
வையமார் பொதுவினின் மறையவர்
     தொழுதெழ நடமதாடும்
ஐயன்மா தேவியோ டிருப்பிட
     மம்பர்மா காளந்தானே.               2

3801. பரவின வடியவர் படுதுயர்
       கெடுப்பவர் பரிவிலார்பால்
கரவினர் கனலன வுருவினர்
     படுதலைப் பலிகொடேகும்


இடும் அடியினர் - (பூசிக்கும் அடியவர்) மலர்களை இடுகின்ற
அடியையுடையவர். பிடி - பெண்யானை. மங்கையோடும் அன்பர்களுக்கு
அருள்புரிந்து இருக்கும் இடமாவது அம்பர்மாகாளம்.

     2. பொ-ரை: சிவபெருமான் கையில் பெருமையான மழுப்படையை
உடையவர். கொடிய விடமுண்டதால் கரிய கண்டத்தை உடையவர். சிவந்த
திருமேனியர். ஊன்பொருந்திய உடைந்த மண்டையோட்டில் பிச்சையேற்றுத்
திரிபவர். உலகனைத்திற்கும் உரியதான சிற்சபையில் அந்தணர்கள் தொழுது
போற்ற நடனமாடும் தலைவர். அப்பெருமான் உமாதேவியோடு
வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: கொடிய விடத்தையுண்டதனால் எய்திய கறுப்பு அமைந்த
கழுத்தை உடையவர். ஊன் அமர் - ஊன் பொருந்திய. உடைதலை -
உடைந்த மண்டையோட்டில். பலிதிரிவார் - பிச்சையேற்பதற்குத் திரிபவர்.
வையம் ஆர் பொதுவினில் - உலகமனைத்தினுக்கும் உரியதான சிற்சபையில்;
நடம் அது ஆடும் ஐயன்.

     3. பொ-ரை: இறைவர் தம்மை வணங்கிப் போற்றும் அடியவர்கள்
படும் துயரத்தைத் தீர்ப்பவர். தம்மிடத்து அன்பில்லாதவர்கள் பால்
தோன்றாத நிலையில் மறைந்திருப்பவர். நெருப்புப் போன்ற சிவந்த
வண்ணமுடையவர். பிரமகபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத்