பக்கம் எண் :

1140திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3830. ஏடமர் பொழிலணி யின்னம்பர் ரீசனை
  நாடமர் ஞானசம் பந்தன்
நாடமர் ஞானசம் பந்தன நற்றமிழ்
பாடவல் லார்பழி யிலரே.                  11

 திருச்சிற்றம்பலம்


சோலைகள் சூழ்ந்த அழகிய திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில்
விரும்பி வீற்றிருந்தருளுகின்றவராய், சமண, புத்த நெறிகளிலுள்ள
குறைகளைக் காட்டித் தாழ்ச்சியுறச் செய்த சிவபெருமானே! சமண, புத்த
நெறிகள் தாழ்வடையும்படி செய்த உம் திருவடிகளைப் போற்றி
வணங்குபவர்கட்குத் துன்பமும், அதற்குக் காரணமான தீவினையும் இல்லை.

     கு-ரை: ஏர் அமர் - அழகு பொருந்திய என்பதினும் ஏர் என்னும்
தலத்துக்கு அணியதாய்ப் பொருந்திய என்பது சிறக்கும், ஏர் - இன்னம்
பருக்கு அருகிலுள்ள ஒரு வைப்புத்தலம், அது “ஏரார் இன்னம்பரார்,”
என்னும் திருத்தாண்டகத்தால் அறியத்தகும். அத்தலம் ஏரகரம் என
இப்போது வழங்கும், திருஏரகம் என்னும் சாமிமலையும் இதற்கு அணித்து,
ஆர்தரு - கட்டிய. வினை - அரியவினை, துயர்விக்கும் வினை என
இயையும், தேரர் அமணர் என்பது தேரமண் எனமரீயது.

     11. பொ-ரை: இதழ்களையுடைய மலர்கள் நிறைந்த சோலைகள்
சூழ்ந்த அழகிய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி, தேசமெல்லாம்
விரும்புகின்ற ஞானசம்பந்தன் அருளிய நற்றமிழாலன இத்திருப்பதிகத்தை
ஓதவல்லவர்கள் பழியற்றவர் ஆவர்.

     கு-ரை: ஏடு - இதழ், மலருக்கானமையின் சினையாகுபெயர்,
தேசமெல்லாம் விரும்பும் ஞானசம்பந்தன், நல்தமிழ் பாடவல்லார் பழியிலர்
ஆவர்.