பதிக வரலாறு:
மெய்வகை
ஞானம் உண்ட வேதியர், தோணிவீற்றிருந்தாரைத்
தொழுது வீற்றிருந்த காலத்தில், மயேந்திரப்பள்ளி, குருகாவூர்,
திருமுல்லைவாயில் உள்ளிட்டு எய்திய பதிகளெல்லாம் இன்புற இறைஞ்சி
ஏத்திப் பாடியவற்றுள் ஒன்று இப் பைந்தமிழ்ச் சொல்மாலை.
பண்:
பழம்பஞ்சுரம்
ப.தொ.எண்:
363 |
|
பதிக
எண்: 105 |
திருச்சிற்றம்பலம்
3923.
|
மடல்வரை
யின்மது விம்முசோலை |
|
வயல்சூழ்ந்
தழகாருங்
கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ்
சொரியுங் கலிக்காமூர்
உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய
வொருவன் கழலேத்த
இடர்தொட ராவினை யானசிந்தும்
மிறைவன் னருளாமே. 1 |
1.
பொ-ரை: பூ இதழ்களில் அளவற்ற தேன் பெருகுகின்ற
சோலைகளும், வயல்களும் சூழ, மலைபோன்ற வரும் அலைகளில் கலந்து
முத்துக்களைக் கடல் சொரிகின்ற திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றவனும், உடல் எல்லையில் தங்கும் உயிர் வாழ்வதற்குக்
காரணமான உயிராகிய ஒப்பற்றவனுமாகிய சிவபெருமான் திருவடிகளை
வணங்கித் துதிக்கத் துன்பங்கள் தொடரமாட்டா. அத்துன்பங்கட்குக்
காரணமான, அநுபவித்துக் கழிந்தவை போக எஞ்சியுள்ள வினைகளும்
அழிந்துபோகும். இறைவனின் திருவருட்சக்தி பதியும் பேரின்பம் பெறுவர்.
கு-ரை:
மடல் - பூ இதழ்களில். வரை இல் - அளவற்ற. மது - தேன்.
விம்மு - மிகவும் ஊற்றெடுக்கும், சோலையும் வயலும் சூழ்ந்து. வரை -
மலை போன்ற. ஓதம் - அலைகளில் கலந்து வந்து. முத்தம் - முத்துக்கள்.
சொரியும் - சொரியப் பெற்ற. உடல் வரையின் - உடலின்
|