பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)105. திருக்கலிக்காமூர்1209

ஆனிடை யைந்துகந் தாடினானை
     யமரர் தொழுதேத்த
நானடை வாம்வண மன்புதந்த
     நலமே நினைவோமே.                 5

3928. துறைவளர் கேதகை மீதுவாசஞ்
       சூழ்வான் மலிதென்றல்
கறைவள ருங்கட லோதமென்றுங்
     கலிக்குங் கலிக்காமூர்
மறைவள ரும்பொரு ளாயினானை
     மனத்தா னினைந்தேத்த
நிறைவள ரும்புக ழெய்தும்வாதை
     நினையா வினைபோமே.               6


கழிகள் சூழ்தலுமுடையது திருக்கலிக்காமூர். இத்திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றவரும், பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கவ்வியங்களால்
அபிடேகம் செய்யப்படுகின்றவரும் ஆய சிவபெருமானைத் தேவர்கள்
தொழுது போற்ற அவர்கள் அடையாத நலன்களை அடியேன் அடையும்
வண்ணம் அன்புடன் அவன் அருள்புரிந்த சிறப்பினை அடையும் வண்ணம்
அன்புடன் அவன் அருள்புரிந்த சிறப்பினை என்றும் நினைந்து
போற்றுவோமாக!

     கு-ரை: வான் இடை - ஆகாயத்தில். தீண்ட - அளாவ. மருங்கே -
பக்கத்திலே. கடல் ஓதம் - கடல் திரைகள் (மோத). கான் - கடற்கரைச்
சோலை. கண்டல் - தாழைகள். வாழும் - செழிக்கும். அன்பு தந்த நலம் -
பேருதவி. அமரர் தொழுது ஏத்த, காரியப்பொருளில் வந்த வினையெச்சம்.

     6. பொ-ரை: கடற்கரையில் வளர்ந்துள்ள தாழையின் பூவின்
நறுமணத்தைக் கவர்ந்து வீசுகின்ற தென்றலோடு, மிக்க கருநிறமுடைய
கடலலைகள் எக்காலத்தும் ஒலிக்கின்ற திருக்கலிக்காமூர் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, நால்வேதங்களின் உட்பொருளாக
விளங்கும் சிவபெருமானை மனத்தால் நினைந்து போற்ற எக்காலத்தும்
அழியாத புகழ் வந்து சேரும். துன்பம் வந்து சேர நினையாது.
அத்துன்பத்திற்குக் காரணமான வினைகளும் நீங்கும்.

     கு-ரை: துறை - கடல் துறை. கேதகை - தாழை. வாசம் -
மகரந்தத்தை (வாசம் - காரிய ஆகு பெயர்) சூழ்வான் - தன் உடல் முழுதும்