பக்கம் எண் :

1222திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

ஆழியிவ் வையகத் தேத்தவல்லா
     ரவர்க்குந் தமருக்கும்
ஊழி யொருபெரு மின்பமோக்கும்
     உருவும் முயர்வாமே.                      11

 திருச்சிற்றம்பலம்


இவ்வையகத்திலேயே பேரின்பம் துய்ப்பர். ஊழிக்காலத்திலும் நனிவிளங்கும்
உயர்ந்த புகழடைவர்.

     கு-ரை: கருத்து இன்தமிழ் மாலை - சிறந்த பயனைத் தரும்
கருத்துக்கள் அடங்கிய தமிழ்மாலை. தமிழ்மாலை ஏத்தவல்லார்க்கும் அவர்
சுற்றத்தாருக்கும் உருவும் உயர்வாம். (புகழுடம்பும் உயர்வடையும்.) உயர்ந்த
புகழ் அடைவர் என்பது கருத்து. ஏத்த வல்லாரன்றி அவர் தமரும்
உயர்வடைவரென்றது - “மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை ஆழாமே அருள்
அரசே போற்றி” (தி.8 போற்றித் திருவகவல். அடி.. 118-119.) என்ற
திருவாசகத்தாலும் அறிக. திருஞானசம்பந்தர் புராணம் மருவ லார்புரம்
முனிந்தவர் திருமுன்றில் வலங்கொண் டுருகும் அன்புடன் உச்சிமேல்
அஞ்சலி யினராய்த் திருவ லஞ்சுழி உடையவர் சேவடித் தலத்தில் பெருகும்
ஆதர வுடன்பணிந் தெழுந்தனர் பெரியோர். -சேக்கிழார்.