பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)108. திருஆலவாய்1231

108. திருஆலவாய்

பதிக வரலாறு:
     
வையகம் உய்யவந்த வள்ளலார் தலைமேற் குவித்த கையும் அக
மலர்ச்சி காட்டுங் கண்ணும் உடைய திருநீற்றுத் தொண்டர் வெள்ளம் சூழத்
திருவாலவாயுள் புகுந்து, நோக்கத்தகாத சமணரை நோக்கி, “வாது செய்யத்
தேவரீர்க்குத் திருவுள்ளமோ” என்று அருளை வினாவி, மெய்ம்மைநோக்கி
நுவன்ற தமிழ்மாலை இத் திருப்பதிகம்.

நாலடிமேல் வைப்பு
பண்: பழம்பஞ்சுரம்

ப.தொ.எண்:366 பதிக எண்: 108

 திருச்சிற்றம்பலம்

3956. வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
  ஆத மில்லியமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
     ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
     ஆல வாயி லுறையுமெம் மாதியே.        1


     1. பொ-ரை: உமாதேவியைத் தன் உடம்பில் ஒரு பாதியாக
வைத்துள்ள பரமனே! தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம்
ஆதிமூர்த்தியே! வேதத்தையும், வேள்வியையும், பழித்துத் திரியும்
பயனற்றவர்களாகிய சமணர்களையும், புத்தர்களையும் வாதில் வென்றழிக்க
உம்மை வேண்டுகின்றேன். உமது திருவுள்ளம் யாது? உலகனைத்தும் உமது
புகழே மிக வேண்டும். திருவருள்புரிவீராக!

     கு-ரை: வேதவேள்வி - வேதத்தையும் வேள்வியையும். நிந்தனை
செய்து உழல் - பழித்துத் திரிகின்ற. ஆதம் இல்லி - பயன்
பெறாதவர்களாகிய. அமணொடு - சமணர்களோடு. ஆதம் இல்லி
ஒருமைச்சொல் அமணொடு தேரரை என்ற பன்மையோடு சேர்வது வழு
அமைதியால் கொள்க. ‘ஏவல் இளையர் தாய்வயிறு கரிப்ப’ என்பதுபோல.
எல்லாச் சமயங்களிலும் சொல்லப்படும் கடவுள் சிவன் ஒருவனே ஆகவும்,
ஒரு சமயத்தை அழிக்கப்புகுவது