109.
திருக்கயிலாயமும்-திருவானைக்காவும், திருமயேந்திரமும்-திருவாரூரும்
|
பதிக வரலாறு:
சண்பை
ஏந்தலார், வெண்ணாவல், ஆனைக்கா, மயேந்திரம்,
திருக்கயிலை,திருவாரூர் எனும் நான்கு தலத்து மேவிய வேதப்
பொருளானாரைத் திருவானைக்காவின்கண் புகழ்ந்து பாடி, எல்லையில்
இன்பம் உற்றது இத்திருப்பதிகம். கூடற் சதுக்கம்
பண்:
பழம்பஞ்சுரம்
ப.தொ.எண்:
367 |
|
பதிகஎண்:
109 |
திருச்சிற்றம்பலம்
3967.
|
மண்ணது
வுண்டரி மலரோன்காணா |
|
வெண்ணாவல்
விரும்பும யேந்திரரும்
கண்ணது வோங்கிய கயிலையாரும்
அண்ணலா ரூராதி யானைக்காவே. 1 |
1. பொ-ரை:
மண்ணுண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும்
பிரமனும் காணமுடியாதபடி, திருமயேந்திர மலையில் எழுந்தருளியிருப்
பவரும், காட்சிமிக்க திருக்கயிலையில் எழுந்தருளி இருப்பவரும்,
திருவாரூரில் வீற்றிருப்பவரும், வெண்ணாவல் மரத்தின்கீழ் எழுந்தருள
விரும்புபவரும் ஆகிய தலைவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும்
தலம் திருவானைக்காவேயாகும்.
கு-ரை:
மண் அது உண்ட அரி - பூமியை உண்ட திருமால். உண்டரி
- பெயரெச்சத்து விகுதி அகரம் தொகுத்தல் விகாரம். பிரம விட்டுணுக்கள்
காணமுடியாத மயேந்திரமலையில் எழுந்தருளி இருப்பவரும், காட்சி மிக்க
கயிலையில் எழுந்தருளியிருப்பவரும், தலைமையமைந்த திருவாரூர் முதல்
வரும் ஆகிய சிவபெருமான் வெண்ணாவல் மரத்தின்கீழ்த் தங்க விரும்பிய
தலம் திரு வானைக்காவே ஆகும் என்பது பொழிப்புரை. கண் என்பது
கருவி ஆகுபெயர். அண்ணல் - தலைமை.
|