பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)117. சீகாழி1307

117. சீகாழி

பதிக வரலாறு:

     திருநாவுக்கரசரொடு திருக்காழியில் வழிபட்டிருந்து, பிரியாத
நண்பொடும் அவர் பலதலங்களைத் தரிசிக்கப் போந்த பின் செந்தமிழ்
மாலை விகற்பச் செய்யுட்களை அருளினார் சண்பைவேந்தர். அவற்றுள்
ஒன்றாக வந்த சொற்சீர் மாலைமாற்று இத்திருப்பதிகம்.

பதிகக் குறிப்பு:

     மாலைமாற்று என்பது முதலிலிருந்து இறுதிவரை படித்தால் அமையும்
பாடலே, இறுதியிலிருந்து முதல்வரை, படிப்பினும் அமைவது. அதைச்
சிறுவர்கட்குக் குடகு, விகடகவி என்று கூறிக் காட்டுவர். சொல்லணியில்,
கூடசதுக்கம், கோமூத்திரி, சுழிகுளம், மாலை மாற்று இவைகளை மிறைக்கவி
என்பர். எளிதில் பொருள் காணமுடியாத பாடல் என்பது அதன் பொருள்.
மாதவச்சிவஞானயோகிகள் காஞ்சிப் புராணத்திலும், மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருநாகைக் காரோணப்புராணத்திலும் இவை
போன்ற கவிதைகளை யமைத்துள்ளனர்.

திருமாலை மாற்று
பண்: கௌசிகம்

ப.தொ.எண்: 375 பதிக எண்: 117

 திருச்சிற்றம்பலம்

4057. யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
  காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. 1


     1. பொ-ரை: ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது
பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும்.
பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க
கட்டழகனே! பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும்
என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை,
கால் முதலிய அவயவங்கள் காணாவண்ணம் காமனை அருவமாகச்
செய்தவனே. சீகாழி என்னும்