பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)118. திருக்கழுமலம்1323

     கு-ரை: கானல் - கடற்கரைச்சோலை. கானல் கழனி என வருவதால்
கீழ்ப்பால் நெய்தல் நிலமும், ஏனைப்பால் மருதநிலமும் உள்ளமை
குறித்தவாறு.

ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை

நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர்
எண்ணின் முனிவரர் ஈட்டத்துப் - பண்ணமரும்
ஓலக்கத் துள்ளிருப்ப ஒண்கோயில் வாயிலின்கட்
கோலக் கடைகுறுகிக் கும்பிட்டாங் - காலும்
புகலி வளநகருட் பூசுரர் புக்காங்
கிகலில் புகழ்பரவி ஏத்திப் - புகலிசேர்
வீதி எழுந்தருளு வேண்டுமென விண்ணப்பம்
ஆதரத்தாற் செய்ய அவர்க்கருளி - நீதியால்
கேதகையுஞ் சண்பகம் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த
மாதவியின் போதை மருங்கணைத்துக் - கோதில்
இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு
மருவொடு மல்லிகையை வைத்தாங் - கருகே
கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்
பெருகு பிளவிடையே பெய்து - முருகியலும்
புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி
தன்அயலே முல்லை தலையெடுப்ப - மன்னிய
வண்செருந்திவாய் நெகிழ்ப்ப மௌவல் அலர்படைப்பத்
தண்குருந்தம் மாடே தலையிறக்க - ஒண்கமலத்
தாதடுத்த கண்ணியால் தண்ணறுங் குஞ்சிமேற்
போதடுத்த கோலம் புனைவித்துக் - காதிற்
கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தின்
இனமணியின் ஆரம் இலகப் - புனைகனகத்
தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம்
வைத்து மணிக்கண் டிகைபூண்டு.

                         -நம்பியாண்டார் நம்பி.