| 4116. |
மணந்திகழ்
திசைக ளெட்டுமே ழிசையு |
| |
மலியுமா
றங்கமை வேள்வி
இணைந்தநால் வேத மூன்றெரி யிரண்டு
பிறப்பென வொருமையா லுணரும்
குணங்களு மவற்றின் கொள்பொருள் குற்ற
மற்றவை யுற்றது மெல்லாம்
உணர்ந்தவர் வாழு மோமமாம் புலியூ
ருடையவர் வடதளி யதுவே. 6 |
புரியும் தீமைகளை
அழிக்குமாறு, நெடிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை
அளித்த சிவபெருமான் இனிதாக வீற்றிருந்தருளும் இடம், தீய செயல்களால்
பொருள் சேர்தலைச் செய்யாத நல்லொழுக்க சீலர்களும், பெரும்புகழ் மிக்க
செயல் செய்யும் சான்றோர்களும் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரிலுள்ள
உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.
கு-ரை:
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யார் - சலத்தாற்
பொருள் ... பெய்திரீஇ யற்று (குறள். 660) சலம் - தருக்கபரிபாடை. இங்குத்
தீயவினைகளைக் குறித்தது. ஆளுடைய பிள்ளையார், திருக்குறட்கருத்தை
அமைத்துப் பாடினமைக்கு இது ஒரு சான்று.
6.
பொ-ரை: எட்டுத் திசைகளும் புகழ்மணங் கமழ்கின்றதும்,
ஏழிசைகள் மலிந்துள்ளதும், ஆறங்கங்கள், ஐந்து வேள்விகள், நான்கு
வேதங்கள், மூன்று எரிகள், இரண்டு பிறப்புகள் என இவற்றை ஒருமை
மனத்தால் உணரும் குணங்களும், அவற்றின் பொருளும், குற்றமற்றவை,
குற்றமுள்ளவை இவற்றை உணர்ந்து தெளிந்தவர்களும் ஆன அந்தணர்கள்
வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவரான சிவபெருமான் உடையவர்
வடதளி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
திசைகள் எட்டு இசை ஏழு ... ஒருமை இவ்வாறு வருவதனை
எண்ணலங்காரம் என்பர் மாதவச் சிவஞான யோகிகள். ஒரு கோட்டன்
இரு செவியன் என்பது (சிவஞான சித்தி - காப்பு.) காண்க.
|