பக்கம் எண் :

ஆராய்ச்சிக் கட்டுரைகள்161

தனது தம்பி பராந்தக வீரநாராயணனிடத்து ஒப்படைத்து விட்டுச்
சிவதர்மத்தில் மூழ்கினான்.

     வரகுணனுக்கு வாரிசுகள் இல்லைபோலும், பராந்தக வீர நாராயணன்
911 இல் இறக்கவே அவன் மகன் ராஜசிம்மன் பாண்டி மன்னன் ஆனான்.
இவன் 931 வரை அரசாண்டான். பின்பு சோழர்களுக்குப் பயந்து ராஜசிம்மன்
சிங்களத்துக்கு ஓடிவிட்டான்.

     ராஜசிம்மனுக்கு ஆண்மக்கள் இருவர் இருந்தனர். ஒருவன்
சுந்தரபாண்டியன். மற்றவன் வீரபாண்டியன். சுந்தரன் இளமையில் இறந்தனன்.
அவன் பெயரில் ஒரு பள்ளிப்படைக் கோயில் கட்டப்பட்டது.1 வீரபாண்டியன்
938 முதல் 959 வரை மதுரையில் அரசு புரிந்தான். 944இல் சோழர்களுக்கும்
பாண்டியர்களுக்கும் போர் நடந்தது. வீரபாண்டியன் சோழமன்னன் முதல்
பராந்தகனின் மகனான உத்தம சீலியைக் கொன்றதால் “சோழன்
தலைகொண்ட வீரபாண்டியன்” என்று அழைக்கப்பட்டான். சோழர்களும்
வாளாயிருக்கவில்லை. கி.பி. 959இல் நடந்த போரில் சுந்தர சோழனின்
மகனாகிய ஆதித்ய கரிகாலன், வீரபாண்டியனைக் கொன்றான்.
“வீரபாண்டியன் தலை கொண்ட பரகேசரி” என்றும் அழைக்கப்பட்டான்.2
கொலையும், சண்டையும், சச்சரவும் நமக்கு எதற்கு? ஆகவே
இவ்வாராய்ச்சியை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

நால்வர் காலம்-ஆய்வின் சாரம்:

     திருநாவுக்கரசர் - 580-660
     திருஞானசம்பந்தர் - 640-656
     சுந்தரர் - 700-728
     மாணிக்கவாசகர் - 863இல் பல சாத்திரங்கள் அறிந்த சிறந்த 
                     சிவனடியாராகத் திகழ்ந்தவர். 63க்குப்பின் 
                     இரண்டாம் வரகுணனிடம் அமைச்சராகப் 
                     பணியாற்றியவர்.


     1 S.I.I. XIV Pallimadam inscriptions.
     2 For these Historical accounts see
       N.Sethuraman’s “Early Cholas” edition 1980.