பக்கம் எண் :

184தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள் 

இவைகளைப் பொன்வேயுமாறு, கங்கைகொண்ட சோழனது இரண்டாவது
மகனாகிய விசயராஜேந்திரன், வேளாக்கூத்தானகிய செம்பியன் மூவேந்த
வேளானுக்குக் கட்டளையிட்டிருந்தனன். தன்மகன் வீரசோழ அணுக்கன்மீது
வீர அணுக்கவிஜயம் என்னும் நூலை எழுதிய பூங்கோயில் நம்பிக்கு,
இவ்வேந்தன் நிலம் அளித்திருந்தான். இவ்வேந்தன் காலத்தில்
உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டுப் புறக்குடி உடையான் சுற்றி
ஆதித்தனான சோழ விச்சாதர விழுப்பரையன் இசைபாடுவோர்க்கும்,
கோயிலுக்கு எண்ணெய்க்கும் ஆகப் பொன் கொடுத்திருந்தான்.

     குலோத்துங்கன் கல்வெட்டு ஊர்ச்சபையார் தேவாசிரயன் மண்டபத்தில்
கூடிக் கோயில் காரியங்களைக் கவனித்துவந்ததைக் குறிப்பிட்டுள்ளது.

     மூன்றாங் குலோத்துங்கனுடைய கல்வெட்டு, புதுநீர்வருவழியிலுள்ள
விநாயகர் ஆலயத்தைத் திருப்பணி செய்வித்து, நாள் வழிபாட்டிற்கு நிலம்
அளித்திருந்த செய்தியைக் குறிப்பிட்டுள்ளது. மூன்றாம் இராஜேந்திரன்
திருக்கோயிலுக்கு முன்புள்ள திருமாளிகை விநாயகப் பிள்ளையார் கோயிலை
எடுப்பித்தான். இங்ஙனம் சோழ மன்னர்களே யன்றிப் பிற்காலப்
பாண்டியர்கள் முதலானோர்களும் நிலம் முதலியவற்றை உதவியுள்ளனர்.


     இசைஞானியார்:- சிவநெறிக்குரவர் நால்வருள் ஒருவராகிய
சுந்தரமூர்த்திநாயனாரின் அரும்பெறல் தாயார் இசைஞானியார் என்பதையும்,
அவ்வமையார் கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த ஞான சிவாசாரியாருடைய
மகளார் என்பதையும் அவர் திருவாரூர்ப்பதியினர் என்பதையும் ஒரு
கல்வெட்டு உணர்த்துகிறது.

     இச்செய்தி சேக்கிழார் பெரியபுராணத்தில் இசைஞானியார் புராணத்தில்
காணப்பெறாததாகும்.

     மனுநீதிச்சோழன்:- விக்கிரம சோழதேவரின் ஐந்தாம் ஆண்டில்
பொறிக்கப்பெற்ற கல்வெட்டு பெரியபுராணத்தில் கூறப்பெற்றுள்ள
மனுநீதிச்சோழனின் செயலை உறுதிப் படுத்துவதோடு, அம்மனுநீதிச்சோழனின்
மந்திரியாயிருந்தவன் உபயகுலாமலன் என்பதையும், அவன்
சோழமண்டலத்தில் இங்கணாட்டுப் பாலையூரினன் என்பதையும்
அம்மந்திரியின் வழியில்வந்த பாலையூர் உடையான் சந்திரசேகரனாதி வீதி
விடங்கனான குலோத்துங்கசோழ மாபலிவாணராயன் என்பவன்
விக்கிரமசோழன் காலத்தவன்