பக்கம் எண் :

388திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

      பண்: காந்தார பஞ்சமம்

ப.தொ.எண்:259   பதிக எண்: 1

                         திருச்சிற்றம்பலம்

2801. ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர்
       அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடி னாய்இட மாநறுங் கொன்றை நயந்தவனே
பாடி னாய்மறை யோடுபல் கீதமும்
     பல்சடைப்பனி கால்கதிர் வெண்டிங்கள்
சூடி னாய்அரு ளாய்சுருங்கஎம தொல்வினையே.

     1. பொ-ரை: நறுமணம் உடைய நெய்யும், பாலும், தயிரும்
ஆட்டப்பெற்றவனே! தில்லைவாழந்தணர் எல்லோரும் எப்பொழுதும்
அகத்தும் புறத்தும் பிரியாது வழிபடும் திருச்சிற்றம்பலத்தைத் திருக்கூத்தாடும்
ஞான வெளியாகக் கொண்டு வாழ்பவனே! நறியகொன்றைப் பூமாலையை
நயந்து (விரும்பிச்) சூடியவனே! நான்மறையுள் சாமகானத்துடன் பல
கீதங்களையும் பாடியவனே! பலவாகிய சடைமேல், குளிர்பனியைச்
சொரிகின்ற வெண்ணிலவையுடைய இளம் பிறையைச் சூடியவனே! எம்
தொல்லை வினை இல்லையாம்படி திருவருள் செய்க.

     கு-ரை: எல்லாத் தலங்களுள்ளும் ஓர் ஆண்டிற்குள் ஆறுநாள்
அபிடேக விசேடமுடைய தம் சிதம்பரமேயாதலின் “ஆடினாய்” என்பது
திருநடனத்தையும் கருதிய தொடக்கம் உடையதாகி நின்றது. தில்லைவாழ்
அந்தணருள் நடராசப்பிரானாரும் ஒருவராதலின், பிரியாமை பிரியாதுள்ளது.
சிற்றம்பலம் - ஞானாகாசம், பூதாகாசத்தைப் பிரித்தல் ஒல்லும், கடத்தற்குரிய
தத்துவங்களுள் ஒன்று அது, ஞானாகாசத்தைப் பிரிதல் என்றும்
எவ்வுயிர்க்கும் இல்லை. நாடுதல் - சங்கற்பம். நயத்தல் - விரும்புதல். மறை
- சாமவேதம், பிறவும் கொள்ளப்படும். கீதம் - இசைப்பாடல். திங்கள் சூடிய
கருணைத்திறம், தொல்வினைச் சுருக்கம் வேண்டுங்கால் குறித்தற் பாலது,
பல்சடை எனப்பன்மையும், புன்சடை எனக்குறுமையும், நீள்சடை என
நெடுமையும் பொன்சடை என நிறமும், விரிசடை எனப் பரப்பும், நிமிர்சடை
என உயர்ச்சியும் பிறவும் திருமுறையுட் காணப்படும். பொன் சடையைப்
புன்சடை எனலும் உண்டு.

     “அந்தணர்தம் சிந்தையானை” (தி.6ப.1பா.1) “அரியானை