| பதிக 
        வரலாறு:       இராமன் 
        இலங்கை செற்ற மிக்க பெரும்பாதகத்தை நீக்கவேண்டி, திருவிராமேச்சுரத்தைச் சேர்ந்து, செங்கண்மால் வழிபட்ட கோயில் நண்ணி,
 மங்கையர்க்கு நாயகியாரும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ மணிநீர்
 வாயில்புக்கு வலங் கொண்டு போற்றிப்பாடியது இத் திருப்பதிகம்.
                        
        பண்: காந்தார பஞ்சமம்  
         
          | ப.தொ.எண்: 268 |  | பதிக 
            எண்: 10 |                            திருச்சிற்றம்பலம் 
         
          | 2900. | அலைவளர் 
            தண்மதி யோடய லேஅடக் கிஉமை |   
          |  | முலைவளர் 
            பாகமு யங்கவல் லமுதல் வன்முனி இலைவளர் தாழைகள் விம்முகா னலிரா மேச்சுரம்
 தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே. 1
 |   
       
      1. பொ-ரை:கங்கையையும், 
        குளிர்ந்த சந்திரனையும் சடை முடியிலே அடக்கி, உமாதேவியின் முலைவளர் பாகத்தைக் கூடவல்ல முதல்வனாகிய
 சிவபெருமான், நீண்ட மடல்களையுடைய தாழைகள் மலர்ந்துள்ள கடற்கரைச்
 சோலையையுடைய இராமேச்சுரத்துள், தலைகளால் ஆகிய அழகிய நல்ல
 மாலையை அணிந்து அருளாட்சி செய்கின்றான்.
      கு-ரை:அலை-கங்கையை. 
        குளிர்ந்த சந்திரனைச் சடையின் பக்கத்தே அடக்கி-தேக்கி. உமைபாகம் கூடவல்ல முதல்வன். கிளை-கொம்பு, மிளார்
 முதலிய வேறுமரவகைக் கிருப்பதுபோல தாழை மரங்களுக்கின்மையால் இது
 வளர்தாழை யெனப்பட்டது. தழைகளையுடையது-தாழை-நீளல். முதல்உயிர்
 நீண்டசொல். விம்மு-தழைத்த. கானல்-கடற்கரைச்சோலை. தலையால் ஆகிய
 மிகும் அழகையுடைய நல்ல மாலையையுடையவனாகிய சிவபெருமான்
 இருந்து ஆட்சிபுரியும் இடம் இராமேச்சுரம் என்க. அலை-சினையாகு பெயர்.
 ஆட்சிசெய்யுமிடத்தை ஆட்சியென்றது தொழிலாகு பெயர்.
 |