| 
         
          | 2902. | மானன 
            நோக்கியை தேவிதன் னையொரு மாயையால் |   
          |  | கானதில் வவ்விய காரரக் கன் உயில் செற்றவன் ஈனமி லாப்புக ழண்ணல்செய் தவிரா மேச்சுரம்
 ஞானமும் நன்பொரு ளாகிநின்றதொரு நன்மையே.			3
 |  
         
          | 2903. | உரையுண 
            ராதவன் காமமென் னும்முறு வேட்கையான் |   
          |  | வரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்திய விரைமரு வுங்கடலோதமல் குமிரா மேச்சுரத்
 தரையர வாடநின் றாடல்பே ணுமம்மா னல்லனே. 4
 |  
       3. 
        பொ-ரை: மான் போன்ற மருண்ட பார்வையையுடைய சீதாப்பிராட்டியை மாயம் செய்து கானகத்தில் கவர்ந்த கரிய அரக்கனாகிய
 இராவணனின் உயிரை நீக்கிய குற்றமில்லாத பெரும் புகழுடைய
 அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரமானது மன்னுயிர்கட்கு
 நன்மைதரும் சிவஞானத்தையும், அதன் பயனான முத்தி இன்பத்தையும்
 தரும்.
       கு-ரை: 
        மான் அ(ன்)ன நோக்கு இயைதேவிதன்னை-மான் போன்ற பார்வை பொருந்திய தன் அரசியாகிய சீதையை. கான்(அது)
 இல்-தண்டகவனத்தில், அது பகுதிப்பொருள் விகுதி. கார் அரக்கன்-கரிய
 இராவணன். ஓர் மான்தனால் வவ்வியது-வஞ்சமானால் கணவனைப் பிரித்துக்
 கவர்ந்தது. செற்றவன்-அழித்தவன், செற்றவனாகிய அண்ணல்; கடைசி
 அடிக்கு இராமேச்சுரம் சிவஞானமும் அதன் பயனாகிய முத்தியின்பமும்
 பயப்பதாகிய, புண்ணிய ஸ்தானமாம் என்க. நன்பொருளும் என்று விரிக்க.
 எண்ணும்மை விகாரத்தாற்றொக்கது. முத்தியின்பம் நன்பொருள் எனப்பட்டது,
 உடனெண்ணப்படும் ஞானம் முதலியவற்றிற் சிறத்தலின் நன்மை
 பண்பாகுபெயர். வைதேகி என்ற பாடம் சிறக்கும்.
       4. 
        பொ-ரை: மிகுந்த காமவேட்கையால் பிறன்மனைவியைக் கவர்தல் தவறு என்ற அறவுரையை உணராத, இராவணனின் மலை போன்ற
 தோள்களைத் தொலைத்த இராமன் மகிழ்ந்து போற்றிய, புலவு நாறும்
 கடற்கரையையுடைய இராமேச்சுரத்தில் வீற்றிருக்கும் இறைவன் அரையில்
 பாம்மை கச்சாகக் கட்டித் திருநடனம் புரியும் தலைவனான சிவபெருமான்
 அல்லனோ?
       கு-ரை: 
        உரை-சாபம். சாபம் தனக்கு நேர்ந்ததை உணராதவன்,  |