| 
             குறிப்புகள், 
        பொருள் விளக்கத்துக்காகப் பலநூல்களின் மேற்கோள்கள், சில நுட்பமான விளக்கங்கள் என்பனவற்றை இவர் வரைந்த உரையில்
 எங்கும் காணலாம்.
       சிவபெருமானைக் 
        குறிப்பிடும் சொற்கள் வரும் இடங்களிலெல்லாம் இது சிவனுக்கு ஒரு பெயர் என்று பெரும்பாலும் மேற்கோள்களோடு
 குறிப்பிடுவது இவரிடத்தில் காணப்படும் தனிச்சிறப்பாகும்.
       இவருக்குப் 
        பன்னிரு திருமுறைகளிலும் பயிற்சி மிக உண்டு என்பது இவர் உரையில் பெறப்படுவதாகும். எனினும் பல இடங்களில் திருவாசகம்
 திருக்கோவையார் என்பனவற்றை மேற்கோளாகக் காட்டுவது இவர்பால்
 அமைந்த தனிச்சிறப்பாகும்.
       நுட்பமாக 
        அருஞ்சொற்பொருள் உணர்த்துதலைப் பல இடங்களி்லும் காண்கிறோம். புராணவரலாறுகளைத் தேவையான இடங்களில் குறிப்பிடும்
 இவர் தமக்குப் புலப்படாத செய்திகள் ஒரோவழி உளவாயின் தம்
 புலப்பாடின்மையை வெளிப்படையாகக் கூறும் இயல்பினர். இச்செய்திகளைச்
 சற்று விரிவாகக் காண்போம்.
 1, 
        பதவுரை வரைதல்:       பெரும்பாலும் 
        பாசுரங்களின் பெரும்பான்மையான பகுதிகளில் காணப்படும் சொற்றொடர்களுக்கு உரைவரைந்து விளக்கும் இவர், ஒரு சில
 பாடல்களுக்கு முழுமையும் பொழிப்புரை வரைவதும், முதல் ஈரடிகளுக்கோ
 பின் ஈரடிகளுக்கோ கருத்து வரைந்து விளக்குவதும் பல இடங்களில்
 காணப்படுகின்றன.
       பாடல் 
        முழுதும் பொழிப்புரை - முதல் பதிகத்தின் 2,3 ஆம்பாடல் போல்வன 31-5, 37-6.
       முதல் 
        ஈரடிகளின் கருத்து-9-1, 19-1, 22-5 முதலியன.       பின் 
        ஈரடிகளின் கருத்து-22-2, 44-2, 73-5, 82-5 முதலியன.  2. 
        உவம உருபுகளாக வரும் சொற்கள்:       வரும்-பை 
        அராவரும் அல்குல் 2-3  |