பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)12. திருக்கோட்டாறு485

2922. ஏலம லர்க்குழன் மங்கைநல் லாள்இம
       வான்மகள்
பாலம ருந்திரு மேனியெங் கள்பர
     மேட்டியும்
கோலம லர்ப்பொழில் சூழ்ந்தெழி லார்திருக்
     கோட்டாற்றுள்
ஆலநீழற்கீ ழிருந்தறஞ் சொன்ன
     அழகனே.                           2

2923. இலைமல்கு சூலமொன் றேந்தினா னுமிமை
       யோர்தொழ
மலைமல்கு மங்கையோர் பங்கனா யம்மணி
     கண்டனும்
குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக்
     கோட்டாற்றுள்
அலைமல்கு வார்சடை யேற்றுகந் தவழ
     கனன்றே.                           3


     2. பொ-ரை: மணம் கமழும் கூந்தலையுடைய மங்கை நல்லாளான,
இமவான் மகளான உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாக
வைத்த எங்கள் பரம்பொருளான சிவபெருமான், வண்ணப் பூக்களையுடைய
சோலைகள் சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில்
ஆலமரநிழலில் தட்சணாமூர்த்தியாக அமர்ந்து சனகாதி முனிவர்கட்கு அறம்
உரைத்த அழகனாவான்.

     கு-ரை: ஏலம் - மயிர்ச்சாந்து. பால் - (இடம்) பக்கம். “அறம் சொன்ன
அழகன்” அறம் என்பது, புருடார்த்தங்களையன்று.

     3. பொ-ரை: சிவபெருமான் இலைபோன்ற சூலப்படையைக் கையில்
ஏந்தியவன். விண்ணோர்களும் தொழுது வணங்க மலை மகளான
உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட நீலகண்டன். கங்கையை நீண்ட
சடையிலே தாங்கிய அழகனான அவன், காய்களும், கனிகளும் குலைகளாகத்
தொங்கும் குளிர்ந்த சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும்
தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

     கு-ரை: இலை மல்கு சூலம், மல்கு உவமானம். மலைமல்கும்