| 
         
          | 2950. | தொத்தின 
            தோள்முடி யுடைய வன்றலை |   
          |  | பத்தினை 
            நெரித்தபைஞ் ஞீலி மேவலான் முத்தினை முறுவல்செய் தாளொர் பாகமாப்
 பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே.    8
 |  
         
          | 2951. | நீருடைப் 
            போதுறை வானு மாலுமாய்ச் |   
          |  | சீருடைக் 
            கழலடி சென்னி காண்கிலர் பாருடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவிய
 தாருடைக் கொன்றையந் தலைவர் தன்மையே.    9
 |  
  சிவனாகிய என்னைச் 
        சீவனாகச் செய்யும் பண்பு என்னே? எனக் கடைசியடிக்குப் பொருள் கொள்க. கொல்-அசைநிலை.
       8. 
        பொ-ரை: கொத்தாகவுள்ள இருபது தோள்களைக் கொண்ட இராவணனின் முடியுடைய தலைகள் பத்தையும் இறைவன் நெரித்தான்.
 அப்பெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் விரும்பி
 வீற்றிருந்தருளுகின்றான். முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியை
 ஒருபாகமாக அணைத்துக் கொண்டவன். அப் பெருமானின் திருவடிகளைப்
 பொருந்தி வாழ்வீர்களாக.
       கு-ரை: 
        தொத்தின-கொத்தாகிய. தோள்-தோள் இருபதையும். முடியுடையவன் தலை, பத்தினை-பத்தையும். முத்தினை முறுவல்
 செய்தாள்-முத்தைப் பல்லாகச் செய்து கொண்ட உமா தேவியார் என்றது,
 முத்துப் போன்ற பல்லையுடையவள் என்றபடி, பொத்தினன்-அணைத்துக்
 கொண்டவன். முத்தை இகழ்ந்தவள் என்றும் ஆம்.
       9. 
        பொ-ரை: நீர்நிலைகளில் விளங்குகின்ற தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், திருமாலும் திருமுடியையும், சிறப்புடைய கழலணிந்த
 திருவடிகளையும் தேடியும் காணாது நிற்க, இவ்வுலகை உடைமைப்
 பொருளாகக் கொண்ட இறைவன் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில்
 கொன்றைமாலை அணிந்த தலைவனாய் வீற்றிருந்தருளுகின்றான்.
       கு-ரை: 
        நீருடைப்போது-தண்ணீரைப் பிறப்பிடமாகவுடைய தாமரைப்பூ. பிரமனும் மாலுமாய் இருவரும் கூடித்தேடியும் அடி சென்னி காண்கிலார்
 என்பது எதிர்நிரல் நிறையாகலின், முறையே சென்னி, அடிகாண்கிலார்
 எனக்கூட்டுக. பார் உடைக் கடவுள்-உலகம்
 |