பதிக வரலாறு:
மூவுலகும்
உய்ய நஞ்சம் உண்ட மூர்த்தியார் மேவிய
திருவிசயமங்கையில் எய்தி, அத்தனியாலயம் சூழ்ந்து தாழ்ந்து, வணங்கி,
அத்தலத்தில் வழிபட்ட கோதனத்தைச் சிறப்பித்து ஏத்திய செந்தமிழ்மாலை
இத்திருப்பதிகம்.
பண்:
காந்தார பஞ்சமம்
ப.
தொ. எண்: 275 |
|
பதிக
எண்: 17 |
திருச்சிற்றம்பலம்
2976. |
மருவமர்
குழலுமை பங்கர் வார்சடை |
|
அரவமர்
கொள்கையெம் அடிகள் கோயிலாம்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி விசய மங்கையே. 1 |
2977.
|
கீதமுன்
னிசைதரக் கிளரும் வீணையர் |
|
பூதமுன்
னியல்புடைப் புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே. 2
|
1.
பொ-ரை: நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை
ஒருபாகத்தில் கொண்ட, நீண்ட சடையில் பாம்பணிந்த சிவபெருமான்
எழுந்தருளியுள்ள கோயில், குரவம், சுரபுன்னை, கோங்கு, வேங்கை ஆகிய
மரங்கள் நிறைந்து விளங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவிசயமங்கை
ஆகும்.
கு-ரை:
மரு - வாசனை. தெய்வக் கற்புடைய அம்பிகையின் கூந்தல்
இயற்கை மணம் கமழ்வது ஆதலால் மரு அமர் குழல் உமை என்றார்.
வார்சடை ... ... எம் அடிகள் - நெடிய சடையின் கண்ணே பாம்பையும்
விரும்பத்தக்க கொன்றை மாலையையும் உடைய எம் அடிகள். குரவும்
ஏனைய மரங்களும் கலந்தபொழில்.
2.
பொ-ரை: கீதங்களை முன்னே இசைக்க விளங்கும் வீணையினை
உடையவரும், பூதகணங்கள் சூழ விளங்கும் புனிதரான
|