| 3022. |
மஞ்சுறு பொழில்வள மலிக ருக்குடி |
| |
நஞ்சுறு திருமிட றுடைய நாதனார்
அஞ்சுரும் பார்குழல் அரிவை அஞ்சவே
வெஞ்சுரந் தனில்விளை யாடல் என்கொலோ. 3 |
| 3023. |
ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர் |
| |
கானிடை
யாடலான் பயில்க ருக்குடிக்
கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்
வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே. 4 |
வனும், பகையசுரர்களின்
மூன்று மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு
கோபித்த முக்கண்ணனுமான சிவபெருமான் காதில் குழை அணிந்தவனாய்த்
திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.
எப்பொருட்கும் முதல்வனான அப்பெருமானின் திருவடிகளைத் தொழத்
துன்பம் இல்லை.
கு-ரை:
மூது எயில் - பழமையான மதில், இங்குத் திரிபுரம். இயல் -
பொருந்திய.
3.
பொ-ரை: மேகம் சூழும் சோலைகளையுடைய வளம் மிக்க
திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நஞ்சுண்ட
திருக்கழுத்தையுடைய தலைவரான சிவபெருமான், அழகிய வண்டுகள்
மொய்க்கும் கூந்தலையுடைய உமாதேவி அஞ்சம்படி கொடிய சுடுகாட்டில்
ஆடல் செய்வது என்கொல்?
கு-ரை:
மஞ்சு - மேகம். அஞ்சுரும்பார் குழலரிவை - அழகிய
வண்டுகள் ஒலிக்கும் குழலையுடைய அம்பிகை; வெம்சுரம் - கொடியகாடு.
பிரளயத்து உலகம் வெந்து சாம்பலான இடம் வெஞ்சுரம் எனப்பட்டது.
அதில் இறைவன் நடித்தது ஒரு விளையாட்டாக இருந்தது என்பார்;
வெஞ்சுரம் விளையாடல் என்கொலோ என்றார்.
4.
பொ-ரை: வினைப்பயனை அனுபவிக்க உடம்பெடுத்த இப்பிறவியை
ஒழிக்க நினைக்கும் மாந்தரீர்! சுடுகாட்டில் திருநடனம் செய்யும் சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள உயர்ந்த
கோயிலை வணங்கியும், நாள்தோறும் வானவர்கள் தொழுகின்ற
அப்பெருமானின் திருவடிகளை வாழ்த்தியும் வாழ்வீர்களாக!
|