| 
       
        பெருந்தடங்கொங்கை-அம்பிகை; 
        அன்மொழித் தொகை, பன்மொழித்தொடர். சம்பந்தன செந்தமிழ்; அகரம், ஆறனுருபு. ஆகையால் செந்தமிழ் என்பதற்குச்
 செந்தமிழ் (ப்பாசுரங்)கள் என்க. ஒவ்வொரு பாசுரத்திலும் "பெருந்தகை எம்
 பெருமாட்டியுடன் இருந்ததே என்று .... அண்ணலார் தமை வினவித்
 திருப்பதிகம் அருள் செய்தார்" என்ற பெரியபுராணப் (தி.12) பாடலின்படி
 எம்பெருமாட்டியுடன் பெருந்தகை (நன்கு) இருக்கிறாரா? என்று வினவினதாக
 இருத்தலால் ஈற்றேகாரம் வினாப்பொருளில் வந்தது. இதனை ஈற்றசை என்று
 உரைத்தாருமுளர்.
 
         
          | திருஞானசம்பந்தர் 
              புராணம்  சிவபாத 
              விருதயர்தாம் முன்தொழுது சென்றணையத் தவமான நெறியணையுந் தாதையார் எதிர்தொழுவார்
 அவர்சார்வு கண்டருளித் திருத்தோணி அமர்ந்தருளிப்
 பவபாசம் அறுத்தவர்தம் பாதங்கள் நினைவுற்றார்.
 |   
          |  |   
          | இருந்தவத்தோர் 
            அவர்முன்னே இணைமலர்க்கை குவித்தருளி அருந்தவத்தீர்! எனைஅறியாப் பருவத்தே எடுத்தாண்ட
 பெருந்தகைஎம் பெருமாட்டி யுடனிருந்த தேஎன்று
 பொருந்துபுகழ்ப் புகலியின்மேல் திருப்பதிகம் போற்றிசைத்தார்.
 |   
          |  |   
          | மண்ணினல்ல 
            என்றெடுத்து மனத்தெழுந்த பெருமகிழ்ச்சி உண்ணிறைந்த காதலினால் கண்ணருவி பாய்ந்தொழுக
 அண்ணலார் தமைவினவித் திருப்பதிகம் அருள்செய்தார்
 தண்ணறும்பூஞ் செங்கமலத் தாரணிந்த தமிழ்விரகர்.
 -சேக்கிழார்.
 |  |