பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)34. திருமுதுகுன்றம்629

3167. ஆடினார் கானகத் தருமறை யின்பொருள்
  பாடினார் பலபுகழ்ப் பரமனா ரிணையடி
ஏடினார் மலர்மிசை யயனுமா லிருவரும்
தேடினா ரறிவொணார் திருமுது குன்றமே.       9

3168. மாசுமெய் தூசுகொண் டுழல்சமண் சாக்கியர்
  பேசுமெய் யுளவல்ல பேணுவீர் காணுமின்
வாசமார் தருபொழில் வண்டினம் மிசைசெயத்
தேசமார் புகழ்மிகுந் திருமுது குன்றமே.        10

3169. திண்ணினார் புறவணி திருமுது குன்றரை
  நண்ணினான் காழியுண் ஞானசம் பந்தன்சொல்


வருவிக்க, சொல்லெச்சம். சீரினார் - மேலோர்கள். திகழ்தரு - விளங்கி
வாழ்கின்ற. (திருமுதுகுன்றம்).

     9. பொ-ரை: இறைவர் சுடுகாட்டில் திருநடனம் ஆடியவர். அரிய
வேதங்களை அருளி, அவற்றின் உட்பொருளை விரித்தோதியவர்.
எவ்வுயிர்கட்கும் தலைவரான அவர் தம் திருவடிகளை இதழ்களையுடைய
தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் தேடியும்
அறியப்படவொண்ணாதவர். அப்பெருமானார் வீற்றிருந்தருளும் இடம்
திருமுதுகுன்றம் ஆகும்.

     கு-ரை: கானகத்து ஆடினார். பொருளைப் பாடினார். புகழையுடைய
பரமனார். ஏடின் - இதழ்களால். ஒணார் - ஒன்றைக் கிடைக்காதவர்.

     10. பொ-ரை: அழுக்கு உடம்பையும், அழுக்கு உடையையுமுடைய
சமணர்களும், புத்தர்களும் கூறும் மொழிகள் மெய்ம்மையானவை அல்ல.
வாசனை பொருந்திய சோலைகளில் வண்டினங்கள் இசைக்க, அழகும்,
புகழும் மிகுந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தைத் தரிசித்து,
அங்குள்ள இறைவனைப் போற்றி வழிபடுங்கள்.

     கு-ரை: மாசு - அழுக்கு. அச்சொல்லைத் தூசு என்ற சொல்லினும்
கூட்டி அழுக்கு உடம்பையும் அழுக்கு உடையையும் உடைய என உரைக்க.

     11. பொ-ரை: செழுமையான சோலைகளையுடைய திருமுதுகுன்றத்தில்
வீற்றிருந்தருளும் இறைவனை மனம், வாக்கு, காயம்