பக்கம் எண் :

652திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  முடிவுமாய்முத லாய்இவ்வைய
     முழுதுமாய்அழ காயதோர்
பொடியதார்திரு மார்பினிற்புரி
     நூலும்பூண்டெழு பொற்பதே.           3

3203. பழையதொண்டர்கள் பகருமின்பல
       வாயவேதியன் பான்மையைக்
கழையுலாம்புனல் மல்குகாவிரி
     மன்னுகண்டியூர் வீரட்டன்
குழையொர்காதினிற் பெய்துகந்தொரு
     குன்றின்மங்கை வெருவுறப்
புழைநெடுங்கைநன் மாவுரித்தது
     போர்த்துகந்த பொலிவதே.          4


இடையறாது சிந்தித்துக் கொண்டிருக்கும் அடியவர்களே! நீங்கள் எனக்குச்
சொல்வீர்களாக! உலகமெல்லாம் தொழுது போற்றுகின்ற திருக்கண்டியூரில்
வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இவ்வுலகிற்கு அந்தமாயும்,
ஆதியாயும் இருப்பவன். இவ்வுலகம் முழுவதும் நிறைந்து விளங்குபவன்.
அப்பெருமான் தன் அழகிய மார்பில் திருநீற்றுப்பூச்சும், முப்புரிநூலும்
பூண்டு தோன்றுவது ஏன்?

     கு-ரை: அறிகின்றிலேன் என்றது - முற்பிறப்பிற் செய்த சிவ புண்ணிய
மேலீட்டினால் சைவநெறி தலைப்பட்ட ஒருவர் கூறுவதாக வந்தது. கழை -
மூங்கில். முடிவும் முதலும் ஆய் - எல்லா இடமும், எல்லாக் காலமுமாகிய
ஒரு பொருளுக்கு இவ்வையகம் முழுதும் ஒரு உடம்பு. அதில் மார்பும்
அழகிய திருநீற்றுப் பூச்சும், முப்புரிநூலும் பூண்டு தோன்றும் தோற்றம் ஏன்?
பொற்பு என்றது இங்குத் தன்மை என்னும் பொருளில் வந்தது.

     4. பொ-ரை: சிவனடியார் திருக்கூட்டமரபில் வழிவழியாய் வருகின்ற
பழ அடியீராகிய நீங்கள் புத்தடியேனுக்குப் பலவாகிய தன்மைகளையுடைய
இறைவனின் தன்மையைக் கூறுங்கள். மலையிலிருந்து பெருகும் காவிரியால்
வளம்மிகுந்த திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன், தன் காதில்
ஒரு குழையணிந்து மகிழ்ந்து, மலைமகளான உமாதேவி அஞ்சுமாறு
துளையுடைய நீண்ட தும்பிக்கையையுடைய யானையின் தோலை உரித்துப்
போர்த்தது ஏன்?

     கு-ரை: ஈசனது பழ அடியீராகிய நீங்கள் புத்தடியேனுக்குத்