| 3207. |
நாவிரித்தரன் றொல்புகழ்பல |
| |
பேணுவீரிறை
நல்குமின்
காவிரித்தடம் புனல்செய்கண்டியூர்
வீரட்டத்துறை கண்ணுதல்
கோவிரிப்பய னானஞ்சாடிய
கொள்கையுங்கொடி வரைபெற
மாவரைத்தலத் தாலரக்கனை
வலியைவாட்டிய மாண்பதே. 8 |
சிவபெருமானின் தன்மைகளை
எனக்கு உரைப்பீர்களாக! கருநிற அழகிய
கண்களையுடைய மகளிர் வழிபடும் திருக்கண்டியூர் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் வீரட்டநாதன், அன்று ஆலமரநிழலில் நால்வர்க்கு அறம்
உரைத்ததும், தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களின் மூன்று
கோட்டைகளும் எரியுமாறு மேருமலையை வில்லாக வளைத்ததும்
என்கொல்?
கு-ரை:
திருந்துமாறு சொல்லவல்லீர் நீவிரே என்பான், திருந்து
தொண்டர்கள் என்றான். இன்றேல் "குருடும் குருடும் குருட்டாட்டமாடிக்
குழி வீழ்ந்தவாறே". தொண்டர்கள் அண்மைவிளி. இருந்து நால்வரோடு...
வண்ணமே - துறவியாய் உபதேசம் செய்த தூயோன், திரிபுரத்தசுரர்களைக்
கொலை செய்யலாமா? சரியை கிரியை இரண்டும் - அறம், சிவதன்மம்.
(திருக்களிற்றுப்படியார்) மாட்டிய - மாள்வித்த. மாள் என்பதன் பிறவினை.
8.
பொ-ரை: நாவால் சிவபெருமானது பழம்புகழ் போற்றும்
அடியவர்களே! எனக்கு விடை கூறுவீர்களாக. காவிரியால் நீர் வளம்மிக்க
திருக்கண்டியூர் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளுகின்ற நெற்றிக்கண்ணுடைய
சிவபெருமான், பசுவிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோசலம்,
கோமயம் ஆகிய பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்படும் தன்மையும்,
கொடி போன்ற பார்வதி அமைதி பெற, பெரிய கயிலைமலையில் தன்
காற்பெருவிரலை ஊன்றி மலையின் கீழ் இராவணன் நெரியுமாறு செய்து
அவன் வலிமையை அழித்த மாண்பும் என்கொல்?
கு-ரை:
(அரன் தொல் புகழ்) நாவிரித்து, "உன் திருவார்த்தையை
விரிப்பார்" என்பது திருவாசகம். புனல் - நீர்வளம். செய் - உண்டாக்குகின்ற.
கண்டியூர் வீரட்டம். கோ - பசுவினின்றும் கிடைக்கக்
|