பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)42. திருச்சிற்றேமம்681

3253. வெள்ளைத்திங்கள் வாண்முக
       மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோ
     ராடன்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார்சிற் றேமத்தா
     னுருவார்புத்த ரொப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட்
     கரந்துவைத்தான் அல்லனே.            10

3254. கல்லிலோத மல்குதண்
       கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய வின்றமிழ்
     நவிலுஞான சம்பந்தன்


பழமையான இறைவன், அழகிய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
அப்பெருமான் தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், நீலரத்தினம் போன்ற
நிறமுடைய திருமாலும் காணமுடியாதவாறு மழுப்படை ஏந்தி விளங்குகின்ற
செல்வர் அல்லரோ?

     கு-ரை: தனி - ஒப்பற்ற. தணி என்று பாடமாயின் - குளிர்ந்த என்று
பொருள் கொள்ளலாம். துணி - துண்டம். துண்ட வெண்பிறை (நிறைமதியின்
ஒரு துண்டம்) மணி - நீல ரத்தினம். "மழுவாட் செல்வர்" என்பர் அப்பர்
சுவாமிகள்.

     10. பொ-ரை: வெண்ணிறச் சந்திரன் போன்ற ஒளி திகழும்
முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப்பாட, சடைமுடியில்
பிறைச்சந்திரனைச் சூடி, திருநடனம் செய்யும் இறைவன் விரும்பி
வீற்றிருந்தருளுவது திருச்சிற்றேமம் என்ற தலமாகும். அப்பெருமான் புத்தர்,
சமணர் ஆகியோர்களைப் படைத்தும், அவர்கட்குத் தோன்றாதவாறு
மறைந்தும் விளங்குபவர்.

     கு-ரை: ஒப்பில்லாக் கள்ளத்தார் - என்றது சமணரை.

     11. பொ-ரை: கற்களால் ஆகிய மதிலில் கடல் அலைகள் மல்கும்,
குளிர்ந்த கடற்கரைச் சோலைசூழ்ந்த சீகாழியில் அவதரித்த ஞான சம்பந்தன்,
செல்வனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற