| 3290. |
பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக் |
| |
குழக ரென்றுகுழை யாவழை யாவரும்
கழல்கொள் பாடலுடை யார்கரு காவூரெம்
அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 3 |
| 3291. |
பொடிமெய் பூசிமலர் கொய்து புணர்ந்துடன் |
| |
செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூரெம்
அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 4 |
கு-ரை:
விமுதம் - விஸ்மிதம் என்னும் வடசொல்லின் திரிபு.
கங்கையை அடக்கிய ஆச்சரியம். விமுதவல்ல சடையான் வினை -
சிவபெருமானுக்கு அடியவர் செய்யும் திருத்தொண்டுகள் உள்குவார்க்கு -
நினைக்கின்ற தொண்டர்களுக்கு. அமுதநீழல் - அமிர்தம் போல இன்பம்
விளைக்கும் திருவடிநீழல். அகலாததோர் செல்வம் - அழியாத செல்வம்;
"சென்றடையாத திரு". கம் - மணம். வெண்மை, முதம் - உவகை.
கமுதமுல்லை:- வெண்மையும், மணமும், உவகை செய்வதும் முல்லைக்கும்
உள்ளன.
3.
பொ-ரை: பழகுவதற்குரிய சிறப்புடைய சிறுத்தொண்டர்கள்
இன்னிசையோடு பாடி அழகனான சிவபெருமானைக் குழைந்து, அழைத்து,
கழலணிந்த திருவடிகளையே பொருளாகக் கொண்ட பாக்களைப் பாட,
திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் அழகரான சிவபெருமானின் வண்ணம்
நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
கு-ரை:
இதிலுள்ளதொரு வரலாறு விளங்கவில்லை. குழையா -
குழைந்து. அழையா - அழைத்து. உள்ளம் குழைந்து அழைத்து வரும். கழல்
கொள் பாடல் - கழலணிந்த திருவடியையே பொருளாகக் கொண்ட பாக்கள்.
4.
பொ-ரை: திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி, மலர் கொண்டு
தூவிப் போற்றி வழிபடும் அடியவர்கட்குக் குற்றமில்லாச் செம்மையான
உள்ளம் நல்கும் செல்வரான சிவபெருமான், நறுமணம் கமழும்
முல்லைகளையுடைய திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் அடிகளாவார்.
அவருடைய வண்ணம் நெருப்புப்போன்ற சிவந்த வண்ணமாகும்.
கு-ரை:
உள்ளம் நல்கிய செல்வந்தர் - திருநீற்றுப் பூச்சும் மலர்
|