| 
         
          | 3321. | நம்பு வாரவர் நாவி னவிற்றினால் |   
          |  | வம்பு 
            நாண்மலர் வார்மது வொப்பது செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
 நம்பன் நாமம் நமச்சி வாயவே.             2
 |  
         
          | 3322. | நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந் |   
          |  | தக்கு 
            மாலைகொ டங்கையி லெண்ணுவார் தக்க வானவ ராத்தகு விப்பது
 நக்கன் நாமம் நமச்சி வாயவே.             3
 |  
       2. 
        பொ-ரை: சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக் கோடாக நம்பும் பக்தர்கள் திருவைந்தெழுத்தைத் தங்கள் நாவினால் உச்சரித்தால்,
 நறுமணம் கமழும் நாள்மலர்களில் உள்ள தேன்போல இனிமை பயப்பது,
 எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது நம்முடைய
 சிவபெருமானின் திருநாமமான நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தே
 ஆகும்.
       கு-ரை: 
        நம்புவார் - விரும்புவார். நம்பும் மேவும் நசை யாகும்மே என்பது தொல்காப்பியம் (சொல். உரி) வம்புநாண் மலர்வார் மது
 -வாசனையுடைய புதிய மலரில் சொரிகின்ற தேன். இம் மந்திரம் எல்லா
 உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது. நம்பன் சிவ பெருமானுக்கு
 ஒரு பெயர். நம்பனே எங்கள் கோவே என்ற அப்பர் வாக்கால் அறிக.
       3. 
        பொ-ரை: உள்ளம் நெகிழ்ந்து அன்புமிகப் பெருக சிவ பெருமானைச் சிந்தித்து, தமது அழகிய கையில் உருத்திராக்க மாலையைக்
 கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச் செபிப்பவர்களைத்
 தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச் செய்வது ஆடையில்லாத
 சிவபெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய என்னும்
 திருவைந்தெழுத்தேயாகும்.
       கு-ரை: 
        உள் நெக்கு - உள்ளம் நெகிழ்ந்து. ஆர்வம் - ஆசை. அங்கையில் - அழகிய கையிலே. அக்குமாலை கொடு - உருத்திராக்கச்
 செபமாலை கொண்டும். (அங்கையில் - விரல் இடையினாலும்). எண்ணுவார்
 - செபிக்கிறவர்களை. (தகுதியற்றவர்கள் ஆயினும்) தக்க - தகுதிவாய்ந்த.
 வானவராய் - தேவர்களாய். தகுவிப்பது - தகுதிபெறச் செய்வது. நக்கன்
 -ஆடையிலியாகிய சிவபெருமான். நாமம் நமச்சிவாயவே.
 |